விஜய் இப்போ எப்படி வேணா இருக்கலாம்! ஆனா அப்போ இப்படி தான்! ஓபனாக பேசிய தளபதியின் முதல் பட நாயகி கீர்த்தனா
சென்னை: நடிகர் விஜய் நடத்தும் தாகரின் இரண்டாவது மாநாடு பற்றிய பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் அவருடைய முதல் படமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தனா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார். சமீபத்தில் வெளியான 'பேபி & பேபி' திரைப்படத்தில் ஜெய்க்கு அம்மாவாகவும் சத்யராஜுக்கு மனைவியாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். கீர்த்தனா விஜய் பற்றி பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

கீர்த்தனாவின் கலைப்பயணம்
1992 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் விஜய்யின் அறிமுகப் படமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. இது பற்றி கீர்த்தனா லிட்டில் டாக்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் அவர் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். "நாளைய தீர்ப்பு படத்தின் முதல் நாள் சூட்டிங்கே நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பேன், விஜய் சைக்கிளில் வருவார். பின்னர் அவருடன் சைக்கிளில் முன்பக்கம் அமர்ந்து செல்லும் காட்சிதான்" என்று கூறியுள்ளார். மேலும் "விஜய் ஒரு நல்ல டான்சர், சூட்டிங் இல்லாத நாட்களில் கூட இருவரும் நடன ஒத்திகைக்குச் செல்வோம்" என்றும் கூறியுள்ளார்.
பிற திரைப்படங்கள்
அதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'உழவன் மகன்' திரைப்படத்தில் அவருக்குத் தங்கையாகவும் நடித்தார். இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு 'சூர்யன் சந்திரன்', 'பதவி பிரமாணம்', 'பவித்ரா' போன்ற படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.
சின்னத்திரை பிரவேசம்
வெள்ளித்திரைக்குப் பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பிய கீர்த்தனா 'அக்ஷயா', 'ரோஜா,'சலனம்','அன்பே வா' மற்றும் கோலங்கள் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடையேயும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது அவர் நடித்த செல்லம்மா, கனா போன்ற சீரியல்கள் முடிவுக்கு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மீண்டும் சினிமாவுக்கு
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத் துறையில் இருந்தாலும் கீர்த்தனாவின் சமீபத்திய ரீ-என்ட்ரி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் கதாநாயகியின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கீர்த்தனாவின் பேட்டி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்
விஜய்யின் மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அரசியல் பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதால் தனது 69வது படத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
'பேபி & பேபி' திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த குடும்பப் பின்னணியில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தனா நடித்தது அவரது அனுபவத்தையும் பன்முகத் திறமையையும் மீண்டும் நிரூபித்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தனது நடிப்பால் கீர்த்தனா ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications