விஜய் டிவியை மூடனுமா? பிரியங்காவை தூக்குல போடணுமா? இது மட்டும் சரியா? நாஞ்சில் விஜயன் கேள்வி
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரியங்காவை பலரும் திட்டி வருகின்றனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் பிரியங்காவிற்கு ஆதரவாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை மாலை மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டேன் அதற்கு காரணம் இந்த சீசனில் போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் என்னுடைய வேலையை ஆரம்பத்திலிருந்து செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நம்முடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார் என்று ஒரு பெரிய பதிவு வெளியிட்டிருந்தார்.

இது பெரிய அளவில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறித்து பல பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் மணிமேகலை இந்த பதிவுக்கு மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்த குரோஷி கூட இன்று மணிமேகலைக்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் பிரியங்காவிற்கு தான் சப்போர்ட் என்பது போல அவர் பேசி இருப்பதால் அதுவும் இணையத்தில் விவாதிக்கப்படுகிறது.
குரோஷி மட்டுமல்லாமல் சுனிதா, பாவனி, ஷகிலா உட்பட பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இந்த பிரச்சனை தொடங்கிய முதல் நாள் இவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் விட்டுவிட்டு ஐந்து நாட்களுக்கு பிறகு பேசத் தொடங்கி இருப்பதும் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் பிரியங்கா இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜய் என் தன்னுடைய youtube சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் பிரச்சனை பற்றி பேச விரும்புகிறேன். ஆனால் நான் மணிமேகலைக்கு ஆதரவா பிரியங்காவிற்கு ஆதரவா என்று கேட்டால் நான் யாருக்கும் ஆதரவு கிடையாது. எனக்கு இரண்டு பேரையும் நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது சமூக வலைதளத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. மணிமேகலை தனக்கு அந்த நிகழ்ச்சியில் இருக்க பிடிக்கவில்லை என்று வெளியே வந்து விட்டார். இது அவர் தரப்பில் இருந்து பார்க்கும்போது சரியானதுதான் காரணம். ஒரு இடத்தில் இருக்கும் போது நமக்கு மரியாதை இல்லை என்றால் அங்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் பிரயோஜனம் இல்லை.
அதே நேரத்தில் மணிமேகலை தன்னுடைய கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து பலரும் இணையத்தில் பிரியங்கா குறித்து அவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்தும் அட்டாக் பண்ணி போஸ்ட் போட்டு வருகிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். ஒரு சில வயதானவர்கள் கூட youtube சேனல்களில் இது பற்றி பேசி வருகிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் இதை பேசுவதால் பிரியங்காவை தூக்கில் போட வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? அல்லது விஜய் டிவியை இழுத்து மூட வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு வீடியோவோ அல்லது போஸ்ட் போட்டாலும் அதற்கு கீழே மணிமேகலைக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். மக்கள் கேட்பதை பார்த்தால் மணிமேகலைக்கு பணம் தர வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகிறார்களா? என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று புரியாத வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக விஜய் டிவியை எடுத்துக் கொண்டால் அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அங்கு எதற்காக விஜய் டிவி ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கு காரணம் ஒரு சிலர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலங்களாக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான். மற்றபடி இவர்களை தான் இங்கே வைத்துக் கொள்ள வேண்டும் இவர்கள் இல்லை என்றால் இந்த சேனலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அப்படி எதுவும் கிடையாது.
அதுபோல பிரியங்கா அவருடைய வேலையை சிறப்பாக பார்க்கக்கூடியவர். எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர். அவர் மட்டுமல்ல எல்லாருமே ஒரு இடத்தில் இருக்கும் போது அந்த நிகழ்ச்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் அதிகமாக கண்டன்ட் கொடுக்க வேண்டும் என்று போட்டி போடுபவர்கள்.
அது படித்தான் பிரியங்காவும் நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது பிரச்சனை வேறு விதமாக போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து கேட்கிறேன் மக்கள் யாரும் தவறாக கருத்துக்கள் போட வேண்டாம் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அந்த பேட்டியில் நாஞ்சில் விஜயன் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஏற்கனவே நாஞ்சில் விஜயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஆனால் தனக்கு சரியான அங்கீகாரம் தரவில்லை, நான் அங்கு பேசுவது சேனலில் எதுவும் காட்டப்படவில்லை என்றும் அங்கு இருக்கும் சீனியர்களுக்கு தான் அதிகமான வாய்ப்பு கொடுக்கிறார்கள். எங்களை அடுத்த நாள் கூப்பிடுகிறோம் என்று சொன்னார்களே தவிர அதற்கு பிறகு சூட்டிங் கூப்பிடவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அது மறந்து போய்விட்டதா? என்று இப்போது நாஞ்சில் விஜயனிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications