யாரு காம காட்டேரினு பாருங்க? சம்யுக்தாவின் பப்பி லவ் ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்ட விஷ்ணுகாந்த்
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தாவின் பப்பி காதல் ஸ்கிரீன் ஷாட்டை அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார்.
தம்மை சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் காம காட்டேரி என்று கூறியதால் யார் இதில் காம காட்டேரி என்று சொல்லுங்கள் என ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு விஷ்ணுகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக சின்னத்திரை தம்பதிகளான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்பப் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சில நாட்களில் கருத்து வேறுபாடால் பிரிந்த பிறகு ஒருவரை மாற்றி ஒருவர் பல குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
சுமார் 15 நாள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக இவர்கள் இருவரும் சுமத்தும் குற்றசாட்டுகளை குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் இவர்கள் இருவரின் செயலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாறி மாறி ஒருவரை ஒருவர் கருத்துக்களில் தாக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா தங்களுடைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு அதற்கு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஷேர் செய்து வருகின்றனர். சம்யுக்தாவிடம் ரசிகர் ஒருவர் கமெண்டில் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதில் சம்யுக்தா உங்களை எதுக்காக விஷ்ணுகாந்த் கல்யாணம் பண்ணுனாருன்னு இப்பதான் தெரியுது. அவர பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சதால அவரை யாரும் மேரேஜ் பண்ணல. அதனாலதான் உங்கள பொய் சொல்லி கல்யாணம் பண்ணி யூஸ் பண்ணி த்ரோ பண்ணிட்டார் கரெக்டா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு சம்யுக்தா அவனுக்கு ஒரு பொண்ணு கூட எங்கேஜ்மென்ட் வரைக்கும் போய் நின்னுடுச்சு. அந்த பொண்ணு என்ன புண்ணியம் பண்ணிச்சோ தெரியல. அந்த பெண்ணு தப்பிச்சிட்டு, நான் மாட்டிக்கிட்டேன். இந்த லூசு கிட்ட இனி எந்த பொண்ணு பலியாக போகுதோ? அந்த காம காட்டேரி கிட்ட... என்று பதில் கொடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார்.
இதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து, உங்களுக்கு அடுத்த ஸ்டோரிய பார்த்தா யாரு காம காட்டேரின்னு தெரியும் என்று கூறி, சம்யுக்தா அக்கவுண்டில் இருந்து இன்னொரு நபரிடம் பேசியது போன்ற ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்திருக்கிறார்.

அதில் இன்னொரு நபரிடமிருந்து சம்யுக்தாவிற்கு, எருமை உனக்கு சோறு கிடையாது போடி என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு சம்யுக்தா போட்டோ வச்ச அக்கவுண்டில் இருந்து, எனக்கு சோறு தேவையில்லை. நீ போதும் உன்னை சாப்பிடுகிறேன் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னொரு ஐடியில் இருந்து ஐயோ எனக்கு இது போதும் எனக்கு இது போதும் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதற்கு சம்யுக்தா போட்டோ வைத்த ஐடியில் இருந்து இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோ. ஒரு வருஷம் கழிச்சு அனுப்பு பார்த்து சிரிச்சுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை பகிர்ந்த விஷ்ணுகாந்த் இது பப்பி லவ்வின் சாம்பிள் தான் என்று கூறி இருக்கிறார். மேலும் எல்லோரும் இதை பார்த்து சம்யுக்தா யாரு கூட சேட் பண்ணுனாங்கனு கேக்குறீங்க. ஆனா அவங்க நேம் இப்போ சொல்ல விரும்பல. ஆனா அவரும் அந்தப் பெண்ணால பாதிக்கப்பட்டவங்க தான். காலம் பதில் சொல்லும் என்று விஷ்ணுகாந்த் இன்னொரு ஸ்டோரியில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட இந்த ஸ்க்ரீன் ஷாட்டை பாத்தீங்களா? என சம்யுக்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு சம்யுக்தா ஆமா பார்த்தேன். இன்னும் நான் நிறைய எக்ஸ்பர்ட் பண்ணுறேன். இது பத்தல, ஃபேக்கா, சாட் ப்ரூப் ஆடியோ ப்ரூப் என்னால இப்போ நினைச்சாலும் ரெடி பண்ணி மீடியால இவன அசிங்கப்படுத்த முடியும். இவன் எவ்வளவுக்கு எவ்வளவு பண்றானோ அது எனக்கு இப்ப பிராஃபிட் தான். சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு வரப்போகுது. ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் என்று கூறி இருக்கிறார்.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications