விஜே அர்ச்சனா மகளின் போட்டோவை தவறாக பயன்படுத்திய நபர்! நண்பனை நம்பியதால் வந்த வினை
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளர்களில் ஒருவராக பலருக்கும் பரிச்சயமான அர்ச்சனா தன்னுடைய மகளின் புகைப்படத்தை ஒரு நபர் தவறாக பயன்படுத்தியது குறித்து பேட்டி ஒன்றில் கடுமையாக பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய மகளிடம் நான் பிரண்ட்லியாக நடந்து கொள்கிறேன் ஆனாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத சில செயல்கள் நடந்து விடுகிறது என்று கூறி இருக்கிறார்.
விஜே அர்ச்சனாவின் மகளான சாராவும் தொகுப்பாளினியாக இருக்கும் நிலையில் தன்னுடைய பள்ளியில் தன்னுடைய நண்பர்களோடு எடுத்த புகைப்படத்தை ஒரு மாணவன் தவறாக பயன்படுத்தி இருந்தாராம். அந்த புகைப்படத்தை பார்த்ததும் அர்ச்சனா தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் தொகுப்பாளினி என்று சொன்னதும் ஒரு சிலருடைய முகம் டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும் அந்த வரிசையில் ஒருவர் தான் அர்ச்சனா. இவர் பல வருடங்களாக ஜீ தமிழில் தொகுப்பாளராக இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் சில வருடங்களாக தொகுப்பாளராக இருந்தார். இப்போது மீண்டும் ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
தன்னுடைய தனித்துவமான பேச்சுத் திறமையின் மூலமாக இத்தனை வருடங்களாக சிறந்த தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். அவரும் தாயைப் போலவே தொகுப்பாளராக மாறி இருக்கிறார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சாரா அம்மாவோடு சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அம்மாவுக்கு பொண்ணு குறைந்தவர் அல்ல என்று நிரூபித்து இருந்தார்.
அதுபோல இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் சாரா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மா மற்றும் சித்தியோடு இவர் போடும் டான்ஸ் மற்றும் க்யூட்டான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதனாலேயே சாராவிற்கும் இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் சாராவிற்கு பள்ளியில் அதிகமான நண்பர்களே கிடையாது என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.
காரணம் நான் ரொம்ப மெச்சூராக பேசுகிறேன் இந்த வயசில் இவ்வளவு மெச்சூரா பேசுறாளே என்று கூட என்னிடம் பலர் பேசுவதில்லை அதுபோல நான் மீடியாவில் இருக்கிறேன் என்பதாலேயே என்னிடம் சிலர் ஒதுங்கியே போவார்கள். எனக்கு அது வருத்தத்தை கொடுக்கும் என்று சாரா கூறி இருந்தார். இப்படியான நிலையில் இன்று பேட்டி ஒன்றில் அர்ச்சனா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும் இன்னைக்கு கூட இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு சாராவோடு சண்டை போட்டுட்டு தான் வந்தேன். காரணம் சாரா போன வாரத்தில் அவருடைய நண்பர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சாராவும் இன்னொரு பெண்ணும் அதுபோல இரண்டு ஆண்களும் இருந்திருக்கிறார்கள். நான்கு பேரும் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதை ஒரு பையன் சாரா மற்றும் இன்னொரு பையனையும் கிராப் பண்ணி இன்ஸ்டாகிராமில் இவனோட ஆளு இவ தான் என்று சாராவை மென்ஷன் பண்ணி இருக்கிறார்.
அந்த போட்டோவை பார்த்ததும் நான் சாராவிடம் என்னவென்று கேட்டேன் அதற்கு சாரா இந்த பாருங்கம்மா நாங்க நாலுபேரும் எடுத்த போட்டோ என்று சொன்னார். அந்த போட்டோவை சாரா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடவில்லை. ஏன் என்றால் அதில் யூனிபார்மோடு இருக்கிறார். ஆனால் அதை எப்படியோ இன்னொரு மாணவனுக்கு போய் அந்த மாணவன் அதை கிராப் பண்ணி இன்னொரு பையனையும் சேர்த்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அந்த போட்டோவை பார்த்ததும் எனக்கு டக் என்று கோபம் வந்துவிட்டது. நான் சாராவை பற்றி மட்டும் யோசிக்கவில்லை. சாராவோடு இருக்கும் அந்த பையனைப் பற்றியும் யோசித்து தான் கோபப்பட்டேன். காரணம் அந்த பையனின் பெற்றோர் இந்த புகைப்படத்தை பார்த்தால் இதற்கு தான் இந்த மாதிரி மீடியாவில் இருக்கிற பெண்ணோடு நீ பேசக்கூடாதுன்னு சொன்னோம் என்று சொல்வார்கள். பிறகு எங்கேயாவது வெளியே போறோம் என்று சொன்னால் கூட அவர்கள் சாராவோடுதான் இவன் போறானா இருக்குமோ என்று யோசிப்பார்கள்.
எனக்கும் கூட சாரா வெளியே போகிறேன் என்று சொன்னால் அந்த பையன் வருவானோ என்று யோசனை தன்னால் வந்துவிடும். இந்த மாதிரி ஒரு பிரச்சனை வரக்கூடாது என்றுதான் நான் சொல்கிறது. சாரா மீடியாவில் இருக்கிறாள். அதனால் அவளுக்கு இந்த மாதிரி பிரச்சனை பெருசாக தெரியாது. ஆனால் அவளோடு அந்த புகைப்படத்தில் இருக்கும் பையனுக்கு அப்படியே என்று சொல்ல முடியாது இல்ல என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications