Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராத்திரி வரைக்கும் ஒன்னா இருந்தோமே.. கதறி அழுத மணிமேகலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே சித்துவுடன் செலவழித்த கடைசி நிமிடங்களை நினைவு கூர்ந்து கதறி அழுதுள்ளார் தொகுப்பாளர் மணிமேகலை.

விஜே சித்ராவின் மரணம் தற்போது ரசிகர்களையும் திரை துறையினரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில் அவருடன் ஒன்றாக நடித்த விஜய் டிவி பிரபலமான மணிமேகலை தற்போது பரபரப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறார். அது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோரில் நடித்துக் கொண்டிருந்தாலும் விஜய் டிவியிலபல நிகழ்ச்சிகளிலும் நடித்துக் கொண்டிருந்தார் .அந்த மாதிரிதான் நேற்றய நாளிலும் கூட இவர் விஜய் டிவிக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார் .

தைரியமானவர்

தைரியமானவர்

அந்த போட்டோக்களை தற்போது அவருடன் கலந்து கொண்ட நடிகைகள் வெளியிட்டு இருக்கிறார்கள் அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் ஒரு தைரியமான போல்டான கேரக்டர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் .அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் அவரைப் பற்றி அவருடன் கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவருடன் சீரியலில் நடிக்கும் மணிமேகலை ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

ஜாலியாதானே இருந்தீங்க

ஜாலியாதானே இருந்தீங்க

அதில் ஒன்றாக ஒரே ரூமில் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தோமே அப்போ கூட ஜாலியாக எவ்வளவு கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக நீ இப்படி பண்ணுவாய் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார். சரியாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் உன்னிடம் இருந்து இந்த மாதிரி ஒரு செய்தி வரும் என்று யாருமே நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஏன் இப்படி சித்து

ஏன் இப்படி சித்து

எதற்காக இப்படி பண்ணுனீங்க என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் வெளியிட்டிருக்கிறார். காலையில் கண் விழித்ததும் இந்த செய்தியை கேட்டதும் இது உண்மையாக இருக்கக் கூடாது என்றுதான் ஆழமாக நம்பினோம். ஆனால் எல்லோரையும் ஏமாற்றி விட்டு நீங்கள் இந்த மாதிரி செய்து இருப்பது தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

கலகலப்பு

கலகலப்பு

எப்போதுமே படபடப் பேச்சால் பல ரசிகர்களை மட்டுமல்லாமல் கூட இருப்பவர்களையும் தன்வசப்படுத்தும் விஜே சித்ரா தன்னோடு இருப்பவர்களையும் சந்தோஷமாகவே வைத்துக் கொள்ள விரும்புவார் . அதனால்தான் சூட்டிங் ஸ்பாட்டில் இவர் யாரையும் கலாய்த்துக் கொண்டு தன்னை கலாய்த்தாலும் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே அதனை என்ஜாய் பண்ணி இருக்கிறார் .

நண்பர்கள் ஜாஸ்தி

நண்பர்கள் ஜாஸ்தி

அதனாலேயே இவருக்கு அவர்களுடைய பிரண்ட்ஸ் களிடமும் நல்ல மதிப்பு இருந்திருக்கிறது. அதனால்தான் இவருடைய இந்த மாதிரி முடிவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மணிமேகலை மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பிரபலமான சிவாங்கியும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவருக்காக போஸ்ட் போட்டு இருக்கிறார். எதற்காக அக்கா இப்படி பண்ணினீங்க. நேத்து எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக ஜாலியாக இருந்தோம்.

ஷிவாங்கி அதிர்ச்சி

ஷிவாங்கி அதிர்ச்சி

அதற்குள் எங்களுக்கு இந்த அளவிற்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்து விட்டீர்களே. அதுவும் நம்ப முடியாத அளவிற்கு எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் என்று அவருடன் கடைசியாக நேற்று சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கின்றார் .. சித்துவின் மரணம் ஒட்டுமொத்த சின்னத் திரை உலகத்தையும் உலுக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+