கல்யாணத்துக்கு பிறகு நடந்த சம்பவம்! எவ்வளவு பொறுமையா இருக்கிறது? கனா காணும் காலங்கள் சங்கீதா ஆதங்கம்
சென்னை: சின்னத்திரை உலகில், எப்போதுமே நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் விவாதிப்பது வாடிக்கைதான். ஆனால், சமீபத்தில், தன்னைவிட வயதில் சிறியவரைத் திருமணம் செய்துகொண்டதற்காக, நடிகை வி.ஜே. சங்கீதா நெட்டிசன்களால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு அவர் தற்போது அளித்திருக்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் துணிச்சலான பதில், பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

யார் இந்த வி.ஜே. சங்கீதா
வி.ஜே. சங்கீதா, ஆரம்பத்தில் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்தவர். நடிப்பின் மீதும், ஊடகங்களின் மீதும் இருந்த தீராத ஆர்வத்தால், பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு வி.ஜே. வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, முழுநேரமாகச் சின்னத்திரையில் கவனம் செலுத்திய இவர், நடிப்பின் பக்கம் திரும்பினார்.
இவர் சன் டிவியில் கடந்த 2017-ல் ஒளிபரப்பான 'அழகு' சீரியலில், க்ஷக்ஷபூர்ணா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களிடம் பெரிய பாராட்டைப் பெற்றார். அந்த வில்லி கதாபாத்திரம் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. 2020-ல் இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு, டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பிரபலமான தொடரான 'கனா காணும் காலங்கள்' சீரிஸில் மலர் என்ற டீச்சர் கேரக்டரில் நடித்து, வில்லி பாத்திரத்தில் இருந்து விலகி, ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டினார்.

திருமண விமர்சனங்கள்
சங்கீதா தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தவர், அவரே மலர் டீச்சராக நடித்த 'கனா காணும் காலங்கள்' தொடரில் அவருக்கு மாணவராக நடித்த அரவிந்த் செஷூ. இருவருக்கும் இடையில் ஒருசில வயது வித்தியாசம் இருந்தது. சங்கீதாவை விடவும் அரவிந்த் வயதில் இளையவர் என்ற தகவல் இணையத்தில் வெளியான போது, நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
நடிகர் அரவிந்த் செஷூவின் பயோகிராபி குறித்துப் பார்க்கும்போது, அவரும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ளவர் என்பது தெரிகிறது. இவர், தேசிய விருது பெற்ற படமான 'ஜெய் பீம்' படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலான 'அய்யனார் துணை' என்ற தொடரில் சோழன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படியாக, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உறுதியாகக் காலூன்றியிருக்கும் ஒரு இளம் நடிகர் அரவிந்த்.
சங்கீதாவின் பதிலடி
இந்த விமர்சனங்கள் குறித்து, சங்கீதா தன் கணவர் அரவிந்துடன் இணைந்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. சங்கீதா, "நான் திருமணம் செய்துகொள்ளவே கூடாது என்று நினைத்திருந்தேன். அதனால், அரேஞ்ச் மேரேஜ் வேண்டாம் என்று உறுதியாக இருந்தேன். காதலித்துச் செட் ஆனால் திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்தேன்" என்று தனது பழைய மனநிலையைப் பற்றிக் கூறினார்.

சரியாக அந்தச் சமயத்தில்தான் அரவிந்த் தனக்குக் கல்யாண ப்ரபோசல் கொடுத்தார் என்றும், அது பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் நெகிழ்ந்தார். அடுத்த ஆறு மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், "எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதேபோல், எங்கள் வீட்டில் இருப்பவர்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது, இடையில் இருக்கும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இது 2025-ல் இருக்கிறோம். பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். வயது ஒரு தடை இல்லை" என்று தைரியமாகக் கூறியதோடு, "நீங்களும் வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து பாருங்கள், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்" என்றும் நெட்டிசன்களுக்கு பதிலடியைக் கொடுத்தார். சங்கீதா மற்றும் அரவிந்தின் இந்தத் துணிச்சலான காதல் மற்றும் திருமணம், சமூகம் விதிக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்துள்ளது இன்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications