War 2 collection: 4வது நாள் வசூலில் கூலியிடம் தோற்ற வார் 2! இத்தனை கோடி வித்தியாசம்! மாஸ் காட்டிய ரஜினி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' மற்றும் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'வார் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 14ஆம் தேதி ரிலீஸாகின. இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் என்பதால் பாக்ஸ் ஆபிஸில் எந்தப் படம் வெற்றி பெறும் என்ற ஆவல் திரையுலகில் இருந்தது. நான்காவது நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வார் 2வின் எதிர்பார்ப்பு
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ரஜினியின் 'கூலி'க்கு போட்டியாக 'வார் 2' திரைப்படம் 14ஆம் தேதி வெளியானது. இதில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஜூனியர் என்.டி.ஆர் இப்படத்தில் இருந்ததால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்துக்கு வியாபாரம் ஆகும் என்பது படக்குழுவின் எண்ணம். ஆனால் அந்த பான் இந்தியா ஏமாற்றிவிட்டது.
'வார் 2' படத்தைப் பார்த்தவர்கள் 'கூலி' இதற்கு எவ்வளவோ மேல் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் காரணமாக முதல் நாளில் 'கூலி' வசூலுக்கு டஃப் கொடுத்த வார் 2 அடுத்தடுத்த நாட்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக ஆரம்பித்திருக்கிறது.
ரஜினியின் ஆதிக்கம்
பாலிவுட்டிலேயேகூட 'வார் 2' பெரிய அடி வாங்கியிருக்கிறது. எனவே படத்துக்கு வரும் கூட்டம் குறைந்ததால் 'கூலி' படத்துக்கான சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முதலில் 3,500 தியேட்டர்களில் ரிலீஸான அப்படத்துக்கு இப்போது 4,500 தியேட்டர்கள்வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரிலீஸாகி நான்காவது நாளான நேற்று 'வார் 2' ₹31 கோடியை மட்டும் வசூலித்து இந்தியாவில் மொத்தம் ₹173 கோடியும், 'கூலி' திரைப்படம் நேற்று ₹35 கோடியை வசூலித்து இந்திய அளவில் ₹193 கோடியும் வசூலித்திருப்பதாக Sacnilk வலைதளம் தெரிவித்திருக்கிறது.
Sacnilk வலைதள கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட ₹20 கோடி 'கூலி' முன்னிலையில் இருக்கிறது. இனிவரும் நாட்களிலும் 'வார் 2'வுக்கு கூட்டம் வராது. எனவே பாக்ஸ் ஆபிஸ் ரேஸிலிருந்து அந்தப் படம் வெளியேறும் சூழல் உருவாகிவிட்டது. அதனால் ரஜினிதான் வின்னர் என ரசிகர்கள் அறிவிக்க தொடங்கிவிட்டார்கள்.
வார் 2 - ட்விட்டர் விமர்சனம்
'வார் 2' திரைப்படம், ஜப்பானில் நடக்கும் ஹ்ருத்திக் ரோஷனின் ஆக்ஷன் காட்சியுடன் தொடங்குகிறது. அதன் பிறகு, இயக்குநர் நீண்ட நேரத்திற்கு 'டிராமா'வை நகர்த்தியுள்ளார். படம் தொடங்கி, சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர்., வருகிறார். ரசிகர்களுக்கு ஒரு 'மாஸ்' விருந்தளிக்கும் வகையில் என்.டி.ஆரின் 'என்ட்ரி' காட்சி அமைந்துள்ளது.
நடிப்பு
எதிர்பார்த்தபடி, இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்.டி.ஆர்., ஹ்ருத்திக் இருவரும் போட்டி போட்டு நடித்த காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சம். சில காட்சிகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதல் பாதியில் ஹ்ருத்திக்கின் ஜப்பான் ஆக்ஷன் காட்சியையும் என்.டி.ஆரின் 'என்ட்ரி' காட்சியையும் இயக்குநர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
குறைகளும், ஏமாற்றங்களும்
'வார் 2' ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றாலும், முதல் பாதியில் வழக்கமான காட்சிகள் நிறையவே உள்ளன. கதையிலும் புதுமை இல்லை. சில ஆக்ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் அதிகமாகத் தெரிகின்றன. 400 கோடி பட்ஜெட் படத்திற்கு இருக்க வேண்டிய அளவில் கிராபிக்ஸ் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications