மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி தன்னுடைய தாலியை வைத்து செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: இயக்குனராகவும், நடிகராகவும் புகழ்பெற்றிருந்த மாரிமுத்து சற்றும் எதிர்பார்க்காமல் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவருடைய மறைவு குறித்து அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்த பிறகு அவர் கட்டிய தாலியை அவருடைய மனைவி செய்த செயல் குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து பல இயக்குனர்களோடு துணை இயக்குனராக பல வெற்றி பெற்ற திரைப்படங்களிலும் பணியாற்றி இருந்தார். ஆனாலும் இவர் இயக்குனராக கண்ணும் கண்ணும், புலிவால் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தார். இரண்டுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதைத்தொடர்ந்து இயக்கத்தை கைவிட்ட மாரிமுத்து தொடர்ச்சியாக சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில்தான் அவருக்கு முதன்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் சீரியல் என்பதால் தயங்கிய மாரிமுத்து பிறகு கதையின் முக்கியத்துவத்தை தெரிந்து நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் அவருடைய நடிப்பு பிரபலம் அடைந்தது.
தன்னுடைய உடல் அசைவு, தனித்துவமான பேச்சுத் திறமையின் மூலமாக வில்லனாக நடித்தாலும் அனைத்து ரசிகர்களும் இவருடைய நடிப்பை பாராட்டி வந்தனர். இவருக்காகவே இந்த சீரியலை அதிகமானோர் பார்த்து வந்தனர். அதிலும் ஆண்களும் 2k கிட்ஸ்களும் கூட இவருடைய நடிப்பை பார்த்து சீரியல் பார்க்க தொடங்கியிருந்தனர். அதனாலே ட்ரெண்டிங் ஸ்டார்ட் ஆக மாரிமுத்து வலம் வந்து கொண்டிருந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மாரிமுத்து பிரபலம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு ஜெயிலர், இந்தியன் 2 போன்ற திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல பல விளம்பரங்களிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அந்த வகையில் எல்லாமே நல்ல விதமாக போய்க் கொண்டிருக்கும் போது தான் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகர் மாரிமுத்துவின் குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்துவுக்கு மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டது.
நடிகர் மாரிமுத்து சீரியலில் பெண்களை அடிமைப்படுத்தும் கேரக்டராக நடித்து வந்தாலும் நிஜத்தில் முற்போக்கு வாதியாக தான் இருந்து வந்தார். கடவுளை நான் நம்ப மாட்டேன் என்று பல மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மாரிமுத்துவின் குடும்ப வழக்கத்தின்படி கணவர் இறந்து விட்டால் அவர் கட்டிய தாலியை புகைப்படத்தின் முன்பு கட்டி தொங்கவிட்டு விடுவார்களாம்.
ஆனால் மாரிமுத்து மரணத்திற்கு பிறகு மாரிமுத்துவின் மனைவி அவர் கட்டிய தாலியை கழட்டி வைக்கப் போவதில்லை என்றும், தான் அதை செயின்னாக என்னுடைய கழுத்தில் எப்போதும் போட்டு இருப்பேன் என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது. எப்போதும் என்னுடைய கணவர் என் கூட தானே இருக்கிறார் என்று அவர் மனைவி சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது சரியான முடிவு என்று அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications