ரசிகர்கள் நினைப்பதையே ராபர்ட் மாஸ்டருக்கு புத்திமதியாக சொன்ன குயின்சி..ஆனாலும் இப்படியா பண்ணுவாங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்கள் பரவி வரும் நிலையில் குயின்சி ராபர்ட் மாஸ்டரின் முகத்துக்கு நேராகவே அறிவுரை கூறியிருக்கிறார்.
வந்த வேலையை பார்க்காமல் இப்படி செய்வது அனைவருக்கும் பிரச்சனைதான் என்று குயின்சி எடுத்துக் கூறி பேசிய பிறகும் ராபர்ட் மாஸ்டர் செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போட்டுக் கொடுத்த பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரிடம் சக போட்டியாளராக இருக்கும் குயின்சி இன்று அறிவுரைகளை கூறியிருக்கிறார். லச்சரி பட்ஜெட்டுக்கான ராயல் மியூசியம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ராணியாக ரட்சிதாவும், ராஜாவாக ராபர்ட் மாஸ்டர் அது மட்டுமல்லாமல் அவர்களோடு படைத்தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசியாக ஜனனி, இளவரசராக மணிகண்டன் வேலையாட்களாக மீதம் இருக்கும் போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இதில் அசீம் மற்றும் ரட்சிதா இருவருக்கும் ரகசிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டாஸ்க் பற்றி யாரிடமும் இவர்கள் இருவரும் பேசக்கூடாது என்று பிக் பாஸ் சொன்னதற்கு இணங்க இவர்கள் இருவரும் சொல்லாமலே இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று டாஸ்க் முடிவடைந்துவிட்டது என பிக் பாஸ் இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க் பற்றி கூறியிருந்தார் .

கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்
இந்த நிலையில் இந்த ரகசிய டாஸ்க் பற்றி என்னிடம் யாரும் சொல்லவில்லையே என ராஜாவாக இருந்த ராபர்ட் மாஸ்டர் கதறி அழுது கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அனைவரிடமும் கோபப்பட்டு கொண்டு வெளியே சோபாவில் படுத்து அழுது கொண்டிருக்கிறார். குறிப்பாக ரட்சிதா இவரிடம் டாஸ்கை பற்றி சொல்லவில்லை என்பதை நினைத்து தான் இவர் இவ்வளவு அழுது கொண்டிருக்கிறார் ஆனால் எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டார்கள் பிக் பாஸ் வெளியேயும் என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் கடைசியில் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் என்னை எல்லாரும் ஏமாத்திட்டாங்க என்று இவர் கூறிக் கொண்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகின்றனர்.

மகள் குயின்சியின் அறிவுரை
ஆரம்பம் முதலே ரட்சிதா இடம் இவர் அதிகமாக அட்வான்டேஜ் எடுத்து பழகி வருகிறார். என்னுடைய கிரஷ் என்று ரட்சிதாவை பற்றி கூறி அதற்கு பிறகு ரட்சிதாவிடம் முத்தம் கேட்பது, அவரை கட்டிப்பிடிக்க போவது, ராஜா ராணி டாஸ்க்கில் ரட்சிதாவோடு டான்ஸ் ஆடுவது, கட்டிலில் ஒன்றாக இடம் கேட்பது என பல செயல்கள் ரசிகர்களின் முகசூழிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ரட்சிதாவின் கணவரும் ராபர்ட் மாஸ்டரின் செயலை கண்டித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் ரட்சிதா தன்னிடம் உண்மையை கூறவில்லை என்று இவர் அழுவது பார்ப்பதற்கு காண்டாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் என்னுடைய மகள் என்று ராபர்ட் மாஸ்டர் கூறிய குயின் சி ராபர்ட் மாஸ்டருக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

மீண்டும் வேலையை காட்டலாமா
இங்கே எல்லோரும் விளையாட வேண்டும் தன்னுடைய பெயரை வெளியே தெரிய வைக்க வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். ஆனால் வந்த இடத்தில் ஒருவரிடம் மட்டுமே நீங்கள் அதிகமாக உரிமை எடுத்து பேசுவது, ஒருவரிடம் மட்டுமே அதிகமாக அன்பை பெற நினைப்பது ரொம்ப தவறான செயல். இது வெளியே தவறாகத்தான் காட்டப்படும் அதுபோல தவறாக பேசவும் படும் அவருக்கும் குடும்பம் இருக்கிறது உங்களுக்கும் இருக்கிறது அதனால் இந்த மாதிரி நீங்கள் ரட்சிதாவை நினைத்து அழுது கொண்டிருப்பது அவர் வேறு யாரிடமும் பேசினால் நீங்கள் கோபப்படுவது எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார் .அதற்கெல்லாம் சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர் சிறிது நேரம் கழித்து கிட்சன் பக்கம் வந்ததும் அங்கே மணிகண்டன் மற்றும் கதிரவன் இருவரும் இருக்கும்போது எங்களாலயா நீங்கள் அழுதீங்க என்று கேட்டதற்கு இல்லை மூக்குத்தியாள் தான் அதாவது ரட்சிதாவால தான் என்று கூறுகிறார் .இதை பார்க்கும் ரசிகர்கள் 24 மணி நேர எபிசோடில் ராபர்ட் மாஸ்டரை திட்டி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

கதறி அழுத ரட்சிதா
ராபர்ட் மாஸ்டர் திட்டியதால் ரட்சிதாவும் ரெஸ்ட் ரூம் சென்று அங்கே கதறிக் அழுது கொண்டிருக்கிறார் .அவருக்கு மைனா அட்வைஸ் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் எதற்காக இவர் இப்படி எல்லாம் செய்கிறார். எல்லாரையும் போல தானே நானும் நடந்து கொள்கிறேன் என்னிடம் இவர் என்ன அர்த்தத்தில் இப்படி பேசுகிறார் எதற்காக என்னிடம் கோபப்படுகிறீர்கள் அதை சொல்லுங்கள் நான் அதைப்பற்றி விளக்குகிறேன் என்று நான் சொன்னாலும் அதை ஓபன் ஆக சொல்லாமல் இப்படி என்னால் ஒருவர் அழுது கொண்டிருக்கிறார் என்று ரட்சிதா அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு மைனா, ஷிவின் என ஒவ்வொருவராக ஆறுதல் கூறி வருகின்றனர் .ராபர்ட் மாஸ்டர் ஒரு பக்கம் ரட்சிதா எனக்கு க்ரஷ் ஆக இருந்தாலும் டாஸ்க்கில் எனக்கு மனைவியாக ராணியாக இருந்தாள் ஆனால் கடைசி வரைக்கும் என்னிடம் ரகசியத்தை கூறவில்லையே என்று உரிமையாக கோபப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications