பாலுமகேந்திரா இறக்குறதுக்கு முன்னாடி வாங்கிய சத்தியம்..உருக்கமாக பேசிய நடிகை மௌனிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மௌனிகா வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலுமகேந்திராவோடு தான் நடித்த அனுபவங்கள், வாழ்ந்த வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் பாலுமகேந்திரா இறப்பதற்கு முன்னாடி தன்னிடம் இரண்டு சத்தியம் வாங்கி இருந்தார். ஆனால் அதற்கு நான் என்ன செய்தேன் தெரியுமா? என்று ரகசியத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

What are the two truths that director Balu Mahendra asked actress Monika before she died

நடிகை மௌனிகா வெள்ளி திரையில் முன்னணி கதாநாயகிக்களில் ஒருவராக வலம் வந்தவர் தான். இவர் முதல் முதலாக 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திராவால் தான்" உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா, வண்ண வண்ண பூக்கள், கடைக்குட்டி சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் சின்னத்திரையிலும் விட்டு வைக்காமல் நிம்மதி உங்கள் சாய்ஸ் 2, கலாட்டா குடும்பம், சொந்தம், பாலு மகேந்திராவின் கதை நேரம், சொர்க்கம், சாரதா, ஆனந்தம் விளையாடும் வீடு, ஆயுத எழுத்து என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலிலும் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலு மகேந்திரா பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாலு மகேந்திரா. இவருடைய திரைப்படங்கள் எல்லாம் மற்ற திரை இயக்குனர்களின் திரைப்படங்களைப் போல இல்லாமல் காமெடி, சீரியஸ்படம் என தன்னுடைய தனித்துவத்தை காட்டியிருப்பார்.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும், ஒளிப்பதிவாளர் ஆகவும், தயாரிப்பாளராகவும் பல திறமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சிக்கல்கள் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஷோபாவை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அந்த திருமணம் பல நாட்கள் கூட நீடிக்க வில்லையாம். நடிகை ஷோபா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

அதற்குப் பிறகு அகிலா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். அவருக்கு 18 வயதாக இருக்கும் போது தான் பாலு மகேந்திராவை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அவரோடு இருக்கும்போதே நடிகை மௌனிகாவை திருமணம் செய்து இருந்தாராம். மௌனிகாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் முப்பது வருடம் வித்தியாசமாம்.

நடிகை மௌனிகா பாலு மகேந்திராவோடு குழந்தை பெற்றுக் கொண்டால் அது அவருடைய மனைவி அகிலாவை பாதிக்கும் என குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பாலுமகேந்திராவின் கடைசி காலத்தில் அவரோடு இருந்தது மௌனிகா தானாம். இந்த நிலையில்தான் பாலுமகேந்திரா இறக்கும்போது மௌனிகாவிடம் இரண்டு சத்தியம் வாங்கினாராம்.

What are the two truths that director Balu Mahendra asked actress Monika before she died

அது என்னன்னா, மௌனிகா ரியல் எஸ்டேட் வேலை செய்து கொண்டு இருந்தாராம். ஆனால் அது பாலுமகேந்திராவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால நான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களோடு நீ கண்டிப்பாக நடிக்க வேண்டும் என முதல் சத்தியம் கேட்டாராம். அதற்கு மௌனிகாவும் சரி என்று சத்தியமும் செய்து கொடுத்து விட்டாராம்.

அதோடு விடாமல் இரண்டாவது சத்தியமாக நான் இறந்த பிறகு நீ இன்னொரு நபர் யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாலு மகேந்திரா சத்தியம் செய் என்று சொன்னாராம். ஆனால் மௌனிகா அது மட்டும் என்னால முடியாது என்று சத்தியம் செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டேன் என அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+