ரச்சிதாவோடு வெளியே இதுதான் பிரச்சனை.. அதனால் தான் அப்படி நடந்து கொண்டேன்... உண்மையை உளறிய ஆயிஷா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஆயிஷா, முதல் வாரத்தில் இருந்து ரச்சிதா பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்வதற்கு காரணம் இதுதான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தனக்கும் ரச்சிதாவிற்கும் இருக்கும் பிரச்சனையைப் பற்றி ஆயிஷா பேசியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகைகள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 70 நாட்களில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு கடத்த வாரம் வெளியேறிய ஆயிஷா உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். சின்னத்திரை நடிகையாக உள்ளே சென்று ஆயிஷா அவரைப் போலவே சக சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரச்சிதாவை பற்றி கூறியிருப்பது தான் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தாலும் அவர் கடைசியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

கதாநாயகன் கூறிய சூசகமான பதில்
அதுபோல ஆயிஷாவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு சத்யா சீரியலில் நடித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஜோடியாக விஷ்ணு தான் நடித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது விஷ்ணு இருவருக்குள் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து இருக்கிறது. இருவரும் சண்டையிட்டு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அது போல தான் ஆயிஷாவும் ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டார். அதிகமாக எனக்கு தெரிந்த ரச்சிதா இது அல்ல ரச்சிதா இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய உண்மையான முகத்தை காட்டாமல் இருக்கிறார் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருந்தார்.

மன்னிப்பு கேட்கவில்லை
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ஆயிஷா எனக்கு ஏற்கனவே ரச்சிதாவை நன்கு தெரியும். ஒரு சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது சண்டை சீன் படமாக்கப்பட்டபோது ரச்சிதா என்னை அடித்துவிட்டார். ஆனால் அப்போது ஒரு சாரி கூட கேட்கவில்லை. தெரியாமல் பட்டுவிட்டது என்று கூட சொல்லவில்லை. கட் என்று சொன்னதும் ஒன்றும் நடக்காதது போல அவர் பாட்டுக்கு சென்று விட்டார். அது எனக்கு பெரிய வேதனையாக இருந்தது. அவர் மீது ஒரு கோபமாகத்தான் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கேரக்டராக இவரை பார்த்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அமைதியின் சிகரமாக ரச்சிதா இருப்பதை பார்த்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் சில நேரங்களில் இதுதான் இவருடைய நிஜ கேரக்டராக இருக்குமோ என்று கூட நினைத்திருந்தேன்.

வருத்தமாகத்தான் இருக்கிறது
தொடர்ந்து ரச்சிதா ஒரே மாதிரியே இருப்பதை என்னால் மட்டுமல்லாமல் யாராலயுமே பார்த்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மனிதருக்கு எப்படி கோபம் வராமல் இருக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் தனக்கு கோபம் வந்தால் அதை கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு அமைதியாக போய்விடுகிறார். அப்படி யாராலும் இருக்க முடியுமா? சில நேரங்களில் இதில் எது உண்மையான ரச்சிதா என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் நான் கமல் சார் முன்பு கூட உங்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது ஆரம்பத்தில் வேறு விதமாக பார்த்தேன் ஆனால் இங்கு வந்த பிறகு என் மனதை மாற்றி விட்டேன் என்று கூட கூறி இருந்தேன். ஆனாலும் இப்போ வரைக்கும் ரச்சிதா என்னிடம் ஒரு மன்னிப்பு கேட்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications