டாமினேட்டிங் பிரியங்கா.. ஆளை மயக்கி.. வந்தாச்சு பயில்வான் ரங்கநாதன்.. மணிமேகலைக்கு ரஞ்சித் சப்போர்ட்
சென்னை: மணிமேகலை கிளப்பிவிட்ட விவகாரம் இன்று சின்னத்திரையில் புகைந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாகவே பிரியங்கா மீதான குற்றச்சாட்டை பிரபலங்கள் ஒவ்வொருவராக பகிர்ந்து வருகிறார்கள். இது மேலும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, அதிலிருந்து விலகுவதாக கூறி, இதற்கான சில காரணங்களையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே இதற்கெல்லாம் காரணம் என்று மணிமேகலை சொல்லியிருந்த நிலையில், அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று இணையவாசிகள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
பிரபலங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டபோதே, நிரூப் அன்றே பிரியங்காவை பற்றி கணித்திருந்தார்.. அது அத்தனையும் உண்மை என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
அதேபோல, தாமரை அன்று பிரியங்கா பற்றி சொன்னதும் உண்மையாகிவிட்டது.. பிரியங்கா அனைவரையும் டாமினேட் செய்கிறார். தனக்கு கீழ் தான் எல்லாரும் இருக்க வேண்டும். தன்னை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று சில வேலைகளை பார்ப்பதாக தாமரை கூறியிருந்ததாக, நெட்டிசன்கள் அந்த வீடியோவையும் பரப்பி வருகிறார்கள்.
தொகுப்பாளர்கள்: பிரியங்காவால் பாதிக்கப்பட்டவர் மணிமேகலை மட்டும் இல்லை, ஜாக்குலின், டிடி, திவ்யா போன்றவர்கள் கூட பிரியங்காவால் தான் விஜய் டிவியை விட்டு விலகினார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல, சில விஜய் டிவியின் பிரபலங்களே வெளிப்படையான ஆதரவை மணிமேகலைக்கு வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அவ்வளவு ஏன்? குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குரேஷி, அனிதா சம்பத் உள்ளிட்டோரும் மணிமேகலைக்கே வாழ்த்து கூறியிருந்தனர். இதற்கு நடுவில்,. பாடகி சுசித்ரா பிரியங்காவின் குணம் இதுதான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்..
சுசித்ரா: இதற்கு நடுவில் பயில்வான் ரங்கநாதனும், பிரியங்கா பற்றியும், சுசித்ரா பிரியங்கா பற்றி சொன்னதற்கும், தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. "சுசித்ரா என்ன சொல்கிறார் என்றால், "அவர் ஒரு ஆள் மயக்கி, சிரிச்சு சிரிச்சு பேசியே ஒருவரின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களை ஆளுமைப்படுத்திவிடுவார்.
ஒருவன் காதலிக்கும்போது, எல்லாவற்றையும் விழுந்து விழுந்து செய்வான். காதலியை பத்திரமாக பார்த்து கொள்வான். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்து, திருமணத்திற்கு பிறகு அவனை அடிமைப்படுத்த நினைத்தார். அப்படி அடிமைப்படுத்த நினைக்கும் போது தான் பிரியங்காவின் கணவர் அவரிடம் இருந்து விலக முடிவு செய்தார் அப்படி என்று சுசித்ரா சொல்றாங்க... பிரியங்காவுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
கன்னத்தை கிள்ளி: ஏற்கனவே நான் 2, 3 நிகழ்ச்சியில் பிரியங்காவை பார்த்திருக்கிறேன்.. கன்னத்தை கிள்ளி, இரட்டை அர்த்தத்தில் பேசி சேட்டை செய்வார்... அப்பவே நாம சுதாரித்து, அவருக்கு சரியான கவுன்டர் தந்துவிட்டால், மறுபடியும் நம்ம பக்கம் வர மாட்டார்.. எப்படியாவது தன்வசப்படுத்தி நேயர்களின் ஆதரவை பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
இதற்கு நடுவில், பிரபல தொகுப்பாளர் ரஞ்சித் எஸ். எஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "மணிமேகலை சொல்லக்கூடிய கருத்து முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தது. தன் வேலையில் யார் மூக்கை நுழைத்தாலும், கோபம் வரத்தான் செய்யும்.. திவ்யா துரைசாமி வெளியேற்றப்பட்ட பொழுது, இறுதி உரையை ஆங்கர் பேச வேண்டும். ஆனால் அதனுள்ளே புகுந்து பிரியங்கா பேசினார். இதனால், பிரியங்காவிற்கும், மணிமேகலைக்கும் இடையே மோதல் வெடித்தது.
கேரவன்: இதனால் பிரியங்கா அப்செட் ஆகி கேரவனுக்கு போய்விடவும், உடனே சேனல் டீம் அவரை சமாதானம் செய்தது. பிறகு, செட்டிற்கு வந்த மணிமேகலையிடம், பிரியங்காவிடம் சென்று நீங்கள் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துங்கள் என்று நிகழ்ச்சி குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் மணிமேகலைக்கு கோபத்தை தந்துவிட்டது.
விருது விஷயத்திலும், மணிமேகலையை சேனல் ஓரம் கட்டுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது... மேலும், மணிமேகலையிடம் பிரியங்கா ஒவ்வொரு முறையும் குத்திக்காட்டி பேசிக்கொண்டே இருந்தார்
டிடி உடல்நிலை: டிடிக்கு கூட உடல்நிலை சரியில்லை. அவர் நினைத்திருந்தால், கஷ்டப்பட்டாவது நிகழ்ச்சி செய்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை... அவர் அந்த இடத்தை விட்டுக்கொடுக்கவில்லையானால், இன்று பிரியங்கா" இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது" என்றெல்லாம் ரஞ்சித் பேசியிருக்கிறார்.
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் உமாபதி சொல்லும்போது, முதல்ல டிடி இருந்தாங்க. அவங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னதும் அந்த இடத்தைப் பிடிச்சது இந்த லேடி. திறமை வாய்ந்த நாலைந்து பேர் கொண்ட டீம் தான் கொண்டு வந்தது. அவர்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு பிரியங்கா பண்ற அட்டகாசம் தான் இது. இந்தளவு பிரபலமான விஜய் டிவி ஒரு பெண்ணால நாசமா போயிடுமோன்னு நிலை இப்போ வந்துருக்கு. இப்போது தேஷ் பாண்டேன்ற பூனைக்கு மணிமேகலை என்ற பொண்ணு போய் மணியைக் கட்டிவிட்டுருச்சு" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
இது சரியா: ஆக, மணிமேகலை பிரியங்கா மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக கூறியிருந்த நிலையில், இன்று பிரபலங்கள் ஒவ்வொருவரும் வெளிப்படையாகவே புகார்களை கூறிவருவது பரபரப்பை தந்தவாறே உள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைதானா? அல்லது பிரியங்கா மீதான காழ்ப்புணர்ச்சியா தெரியவில்லை. காரணம், ஒருவர் மீது குறைகள், விமர்சனங்கள் இருந்தால், அதை உடனுக்குடன் அப்போதே சொல்லியிருக்கலாமே? மணிமேகலையை முன்னிறுத்தி தங்கள் ஆதங்கத்தை கொட்டுவது ஏற்புடையதுதானா???
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications