அருண்மொழி அசத்தல் கேள்வி.. இதெல்லாம் எப்படி உங்களால முடிஞ்சது? யோசிக்காமல் சொன்ன இளையராஜா.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஒவ்வொரு பாடலையும் பாடகர்களுக்கு பலமுறை சொல்லித் தருவதால்தான் அவர்களால் அப்படி பாட முடிகிறது? இல்லாவிட்டால், என் மனதில் உள்ளதை போலவே அவர்களால் எப்படி பாட முடியும்? என்று இசைஞானி இளையராஜா பூரித்து சொல்கிறார். இந்த பேட்டியைதான், இளையராஜா ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்.

ஜெயா டிவியில் King of Kings நிகழ்ச்சியை, ஜெயா டிவியில் பாடகர் மனோ தொகுத்து வழங்கியிருந்தார். இதில், இசைஞானி இளையராஜாவிடம், இசைக்கலைஞர்களும், பாடகர்களும் தங்களது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

arunmozhi ilayaraja

இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை பின்னணி பாடகரும், புல்லாங்குழல் கலைஞருமான அருண்மொழி, இளையராஜாவிடம் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார்.. அதில், "எனக்கு முகநூலில் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் பலர் வெளிநாடுகளில் உள்ளனர்.. ஆனால், அனைவருமே இசையை கற்றவர்கள்..

இளையராஜா: என்னிடம் அவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வி, "குறுகிய காலத்தில் இளையராஜா சாரால் எப்படி இப்படி இசையமைக்க முடியுது? இதுவரை இதுபோல் யாருமே செய்யவில்லை.. சாதாரண நபர்களால் முடியாத காரியம்.. குறுகிய நேரத்தில், இசையின் பல விஷயங்களை உள்ளடக்கி எப்படி மியூசிக் கம்போஸ் செய்ய முடியும்? இதுபோல் இனி வேறு யாராவது செய்ய முடியுமா தெரியாது. 30 வருடத்தில் இசையில் செய்ததை, வேறு யார் செய்வதானாலும் 200 வருடமாகும்" என்று என்னிடம் கேட்கிறார்கள்.

இதுபோல உங்களது இசையை பலரும் ஃபேஸ்புக்கில் அனாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.. தபேலா, புல்லாங்குழல், என தனித்தனியாக அனாலிசிஸ் செய்துட்டு இருக்காங்க.. இள நெஞ்சே வா பாட்டில், அந்த புல்லாங்குழல் சத்தம் மிகவும் வித்தியாசமாக கேட்டது.

குறுகிய காலம்: வளையோசை பாட்டில் புல்லாங்குழலை நான் சாதாரணமாகத்தான் வாசித்தேன். ஆனால், நீங்கள் தான் அதில் அழுத்தம் தந்து வாசிக்க சொன்னீங்க.. கடைசியில் அது வேறொரு மாதிரியாக ஒலித்தது. இதெல்லாம் உங்களால் குறுகிய நேரத்தில் எப்படி செய்ய முடிகிறது? இதற்காக யோசிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளையராஜா, "நான் யோசிக்கிறதே இல்லை.. யோசித்தால், mentally reflection தான் அதில் வருமே தவிர இசை வராது. எதற்குமே நான் யோசிப்பதில்லை.. மியூசிக் தானாக வருகிறது. அதை நான் எழுதுகிறேன், அவ்வளவுதான்" என்று பதிலளித்தார்.

நிலா காயுது: பிறகு, பின்னணி பாடகி அனிதா, 'நிலா காயுது நேரம் நல்ல நேரம் பாடலை எப்படி ஜானகி அம்மாவுக்கு சொல்லி தந்தீங்க? அவங்க அதை எப்படி பாடினார்கள் ? மிகப்பெரிய ஆச்சரியம் இந்த பாடல்" என்று கேட்டார்.

அதற்கு இளையராஜா, "நல்லது நடந்தே தீரும்" என்ற படத்தில் காபி ராகத்தில் ஒரு பாடல் போட்டிருந்தேன். அதில்தான் இப்படி ஐடியா வந்தது. அதை அப்போது ஜானகிக்கு சொல்லி தந்ததுமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுபோலதான் நிலா காயுது பாடலும்.. 3வது பிஜிஎம்-மில் 90தசவீதம் நான் சொல்லி தந்தது போலவே பாடிட்டாங்க. இதுபோலதான் பொன்மேனி பாடலும்.

சங்கீத ஜாதி முல்லை: சங்கீத ஜாதி முல்லை பாட்டை பாலு நல்லா பாடியிருந்தாலும், இப்படி ஒரு அவுட்புட்டை வெளியே கொண்டுவர அவர்களை திரும்ப திரும்ப பாட வைக்க வேண்டியிருக்கும்.. அவர்களை பாட வைப்பது நான்தானே? இப்படித்தான் வேண்டும் என்று கேட்டால், அப்படித்தானே பாடியாகணும்? ஏகப்பட்ட ரிகர்சல் போயிட்டே இருக்கும்..

ஒரு பாடகருக்கு பாட்டை சொல்லி தந்தால், எப்படி உடனே பாட முடியும்? எங்கே தாளம் வருதுகிறது? எங்கே கேப் வரணும்? என்பதை சொல்லித்தரணும்.. இதெல்லாம் இமேஜினேஷனில் யாராலும் பாட முடியாது. இப்படித்தான் அந்த பாடல்கள் வரவேண்டும் என்று சொல்லித்தந்து பாட வைப்பதுதான்" என்றார். இளையராஜாவின் இந்த பேட்டியைதான், அவரது ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+