அசீம் தன்னை உருவ கேலி செய்தாரா?... விளக்கம் கொடுத்து பல்வேறு ரகசியங்களை கூறிய ஷிவின்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அசீம், ஷிவினை உருவ கேலி செய்தார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதற்கு தன்னுடைய கருத்து என்ன என்பது பற்றி ஷிவின் கூறியிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 முடிவடைந்த பிறகு அசீம் பற்றி பல தகவல்களை ஷிவின் கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் மற்றும் ஷிவின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்படும் போது அசீம் ஷிவினை பார்த்து உருவ கேலி செய்ததாக வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீமிடம், தான் இதைப் பற்றி கேட்கும் போது அவர் இல்லை என்று கூறினாலும் கமல் முன்னிலையில் தான் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டிருக்கிறார் என ஷிவின் கூறி இருக்கிறார்.

முடிவடையாத பரபரப்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் பரபரப்பு இன்னும் ஓய்ந்த பாடு இல்லை. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணமாக ரசிகர்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் அதிகமான முறை சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். பெண்களை தர குறைவாக பேசி இருக்கிறார். திருநங்கை போட்டியாளரான ஷிவினை உருவ கேலி செய்தார் என்று பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.

அது உருவகேலி தானாம்
இந்த நிலையில் ஷிவின் முதல் முறையாக அசீம் தன்னை உருவ கேலி செய்தாரா? என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அன்று சண்டை ஏற்படும் போது என் முன்னாடி அசீம் செய்த செயல் எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நான் ஜெயிலில் இருக்கும் போது அசீமிடம் கேட்டேன், அதற்கு அசீம் நான் அந்த மாதிரி ஒரு எண்ணத்தில் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ஆனால் அதற்குப் பிறகு வெளியே வந்து பார்த்த பிறகு தான் அவர் கமல் சார் முன்னாடி தான் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் உருவ கேலி தான் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது என கூறியிருக்கிறார்.

அசீம் விளக்கம்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீமிடம் ஷிவினை பார்த்து உருவ கேலி செய்தது சரியா? என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் நான் ஷிவினை பார்த்து உருவகேலி செய்யவில்லை. அந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது எப்போதும் ஷிவினுக்கு கோபம் வந்ததும் கழுத்தில் இருக்கும் நரம்புகள் புடைத்து விடும். அவர் கையை கையை ஆட்டி பேசுவார். அப்போது அந்த இடத்தில் பிரச்சனையை குறைப்பதற்காக தான் நான் அப்படி விளையாட்டாக செய்தேன். ஷிவினுடைய ஸ்டைலை தான் நான் அப்படி அவரை போல கையை ஆட்டி காண்பித்தேன். மத்தபடி நான் அவரை உருவ கேலி செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

பர்சனல் அட்டாக்
அசீம் தன்னிடம் வார்த்தை இல்லாத போது அடுத்தவர்களை பர்சனல் அட்டாக் செய்து அந்த இடத்தில் அவர்களை கோபப்படுத்தி தேவையில்லாத வாக்குவாதங்களை ஏற்படுத்துகிறார். ஒருவரை உருவக்கேலி மட்டுமல்லாமல் அவர்களுடைய ஸ்டைலையும் கிண்டல் செய்வதும் தவறானது தான் என்று நானும் நினைக்கிறேன். அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஸ்டைல் இருக்கும் அதை மாக் செய்து காட்டுவதும் தவறு தானே? அந்த இடத்தில் தம்மால் பேச முடியவில்லை, அந்த இடத்தில் தனக்குரிய சரியான கருத்து இல்லை என்றால் அதற்காக அடுத்தவர்களை எப்படி அட்டாக் செய்யலாமா? இவர் இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறார் இதுவும் தவறான செயல்தான் என்று ஷிவின் கூறி இருக்கிறார்.

இதுவும் தவறுதான்
அதுமட்டுமல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் பல இடங்களில் அசீம் இப்படித்தான் நடந்திருக்கிறார். என்னிடம் மட்டும் அல்லாமல் யாரிடமும் பேசும் போதும் அவருக்கு அந்த இடத்தில் கருத்து சொல்வதற்கு எதுவும் இருக்காது. அதனால் அதற்கு முன்பு நடந்த செயல்களை கூறி அந்த இடத்தில் பர்சனல் அட்டாக் செய்வார். அதனால் அடுத்தவர்களும் கடுப்பாகி கோபப்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் அந்த இடத்தில் தோன்றி கொண்டிருக்கும். ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் அதற்கான சொல்யூஷனை அந்த இடத்தில் அசீம் எந்த நேரத்திலும் பேசியதே இல்லை என்று அசீம் பற்றிய தன்னுடைய கருத்தை ஷிவின் கூறி இருக்கிறார். தற்போது இதை ரசிகர்கள் பலர் பாராட்டிவரும் நிலையில் அசீமுடைய ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து ஷிவினை திட்டி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications