மகாலட்சுமியோடு பிரச்சனை..? காரணம் இதுதானா.. வருத்தத்தில் ரவீந்தர் வெளியிட்ட பதிவு
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரான ரவீந்தர் சமூக வலைத்தளத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
மகாலட்சுமியோடு அதிகமான புகைப்படங்களை வெளியிடும் ரவீந்தர் இப்போது சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே என்று ரவீந்தர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணம் சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களாக தான் இவர்களைப் பற்றிய பேச்சு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது குழப்பமான பதிவு ஒன்றை ரவீந்தர் வெளியிட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் திடீர் திருமணம் செய்து இருந்தனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகி இருந்த நிலையில் இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தையே அதிர வைத்து விட்டது. இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகிய சிறிது நேரத்திற்குள் இந்த ஜோடி மீம்ஸ்களிலும் ட்ரெண்டாகி விட்டனர்.
காதலுக்கு அழகு தேவையில்லை உண்மையான அன்பு மட்டும் தான் தேவை என்று மகாலட்சுமி கொடுத்த விளக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அதுபோல மகாலட்சுமி பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. அதற்கெல்லாம் ரவீந்தர் பதிலளித்து இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு உருக்கமான காதல் கவிதைகளையும் பகிர்ந்து வந்தனர். சமூக வலைதளத்தில் இவர்களுடைய காதல் மழை ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இதனாலே நெட்டிசன்கள் பலரும் இவரை கலாய்த்து வந்தாலும் ரசிகர்கள் மேலும் நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தியும் வந்தனர்.
ரவீந்தர் தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கிறார். அதுபோல மகாலட்சுமியும் தன்னுடைய நடிப்பில் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் வார இறுதி நாட்களில் கோவிலுக்கும் ஹோட்டலுக்கும் சென்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு பலருக்கும் ஏக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரவீந்தர் தான் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து," வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்று புரியாத புதிராக பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். இது யாருக்காக இந்த பதிவு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரவீந்தரின் ஒவ்வொரு பதிவிற்கும் முதல் ஆளாக மகாலட்சுமி தான் லைக் கொடுப்பார். அல்லது கமெண்ட் கொடுப்பார். ஆனால் இந்த பதிவிற்கு இப்ப வரைக்கும் கமெண்டுகளையும் மகாலட்சுமி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் தனியாக சோகமாக இருக்கும் ரவீந்தர் புகைப்படத்தை பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த பதிவு வைரல் ஆகிறது.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications