எங்களுக்காக மட்டும் அல்ல!?வித்தியாசமாக வேண்டுதலை போட்ட மகாலட்சுமி... குவியும் வாழ்த்துக்கள்
நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டிக் கொண்டோம் என்று மகாலட்சுமி பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜே மகாலட்சுமி தைப்பூசம் திருநாளில் தன்னுடைய கணவர் ரவீந்தரோடு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய கணவர் ரவீந்தரோடு முருகன் கோவிலில் வித்தியாசமாக வேண்டுதலை போட்டிருக்கும் விஜே மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
தங்களை நேசிப்பவர்களுக்காகவும் தங்கள் வேண்டிக் கொண்டதாக மகாலட்சுமி கூறியிருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
கடந்த வருடத்தில் சமூக வலைத்தளத்தை புரட்டி போட்ட ஜோடி என்றால் அது மகாலட்சுமி ரவீந்தர் ஜோடியாக தான் இருக்க முடியும். இவர்களுடைய திடீர் திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பலருடைய அதிர்ச்சிக்கு காரணமாக மாறிவிட்டது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் விஜே மகாலட்சுமி ஆரம்பமானது என்னவோ தொகுப்பாளராக இருந்தாலும், தற்போது சீரியல்களில் கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் நடிக்காத சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முன்னணி சேனல்களிலும் இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வில்லி கேரக்டரில் வாசுகியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ரிவ்யூ
வி ஜே மகேஸ்வரியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும், அவரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கியது என்னவோ பிக் பாஸ் ரிவ்யூ நிகழ்ச்சி தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் ரிவ்யூ செய்து அதிகமாக சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவருடைய ரிவ்யூ பார்ப்பதற்காகவே அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருடைய திருமணமும் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியது.90's கிட்ஸ்களின் பேவரைட்டாக இப்ப வரைக்கும் இருந்து வரும் மகாலட்சுமி திடீரென அவருடைய உருவத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து விட்டாரே என்று அதிகமான ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர்.

மகிழ்ச்சியான வாழ்க்கை
ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த விஜே மகாலட்சுமி தான் தன்னுடைய திருமணத்திற்கு அதிகமாக ரவீந்தரை அவசரப்படுத்தி இருக்கிறாராம். தற்போது இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது. அதிகமான நெட்டிசன்கள் இவர்களுடைய திருமணம் நடைபெற்ற போது இவர்கள் இருவரும் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள், பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் ஜோடி தங்களுடைய அன்றாட பணிகளில் பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

எதிர்பாராத வேண்டுதல்
இந்த நிலையில் தற்போது தைப்பூசம் அன்று முருகனை சந்திக்க கோவிலுக்கு சென்று இருக்கின்றனர். அப்போது புடவையில் மங்களகரமாக ஜொலிக்கும் மகாலட்சுமியும் கூடவே அவருடைய கணவர் வேஷ்டியிலும் இருக்கும் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை. எங்களை நேசிக்கும் உறவுகளுக்காக வேண்டிக்கொண்டோம். முருகன் இருக்க பயமேன்! என்று பதிவை தட்டி விட ,அது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி மார்டன் உடையில் வலம் வரும் மகாலட்சுமி தற்போது ரசிகர்களுக்கு பிடித்த புடவையில் காட்சி தந்ததை பார்த்து அதிகமான ரசிகர்கள் புகழ்ந்து கமெண்டுகளை பறக்க விடுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications