பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரச்சிதா கூறிய ரகசியங்கள்.. வெளியே வந்தும் கண்டிஷன்களா?.. இவ்ளோ இருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசிய வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் சில நிபந்தனைகள் தங்களுக்கு இருப்பதாக ரச்சிதா குறிப்பிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது தான் கூறிய அதே வார்த்தைகளை கொஞ்சமும் பின் வாங்காமல் ரச்சிதா பேசி இருப்பதை குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

எதிர்பாராத வெளியேற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா வெளியேற்றப்பட்டார். ரச்சிதா எப்படியும் கடைசி 5 போட்டியாளர்கள் வரிசையில் இருப்பார் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ரச்சிதா வெளியேற்றம் பெரிய அளவில் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. ஆனாலும் ரசிகர்கள் அவர் வெளியே வந்த பிறகும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதாக கூறி வருகின்றனர்.

மாறாத கேரக்டர்
வெளியே வந்த பிறகு முதல் முறையாக தன்னிடம் தன்னுடைய ரசிகர்களிடம் கேள்விகளுக்கு லைவில் பதிலளித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ரச்சிதா இன்னொரு முகத்தை காட்ட வில்லை. கோபமே படாமல் இருக்கிறார், அமைதியாக இருக்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது குவிந்து வந்தாலும், அவர் இருந்த 91 நாளுமே அவர் தன்னுடைய கேரக்டரில் இருந்து மாறுபடாமல் அப்படியே இருந்து வந்தார். அதனால் தான் விக்ரமன் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவை பாராட்டி இருந்தார்

விக்ரமனின் பாராட்டு
ஆரம்பத்திலிருந்து நீங்கள் உங்களுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்று அனைவரும் கூறி வந்தாலும், இத்தனை நாட்களாக நீங்கள் ஒரே கேரக்டரில் தான் இருக்கிறீர்கள். யாராலையும் இவ்வளவு நாட்களாக நடித்துக் கொண்டு இருக்க முடியாது. அப்போது இதுதான் உங்களுடைய நிஜ முகம் என்று விக்ரமன் பாராட்டி இருந்தார். ரச்சிதா மற்றும் விக்ரமன் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு அழகான பாண்டிங் இருந்தது. இதை வைத்து ரசிகர்கள் இருவரையும் பாராட்டி வந்தனர். இந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்கிரமன் மற்றும் அசீம் பற்றி ரச்சிதா சில தகவல்களை கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு கண்டிஷன் இருக்கா
நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமாக லைவில் ரசிகர்களிடம் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் இப்போதே ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி விடுகிறேன் என்று ஒரு வீடியோவில் அவசரமாக பேசியிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அப்போ எல்லாருக்குமே பிக் பாஸ் இப்படி தான் அறிவுரை கூறினார்களா? வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனுப்பி வைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது இப்போது உள்ள வீடியோ தானா அல்லது பழைய வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications