ரச்சிதா வெளியே வந்து விட்டாரா? கணவர் வெளியிட்ட வீடியோ.. ஒரு வழியா நல்ல முடிவுக்கு வந்துட்டாங்க போல
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை குறித்து அவருடைய கணவர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வாரம் ரச்சிதா வெளியேற்றப்படுகிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையை தற்போது அதற்கு அவருடைய கணவரின் பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக ரச்சிதாவும் அவருடைய கணவரும் பிரிந்து இருந்த நிலையில் தற்போது வெளியான வீடியோ ரச்சிதாவின் மீது தினேஷுக்கு இருக்கும் பாசத்தை குறிப்பதாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

காதல் திருமணம்
சின்னத்திரை நடிகை ரச்சிதா அவருடன் முதல் சீரியலில் நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருடைய திருமணமும் சீக்கிரமே நடைபெற்று விட்டதே என்று பலர் கருத்து கூறி வந்தாலும் எங்களுடைய காதல் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டிருந்தோம் என்று அப்போது பல சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தனர். சின்னத்திரை ரசிகர்களின் மத்தியிலும் இவர்களுடைய ஜோடி பொருத்தத்தை அதிகமாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரச்சிதாவுக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.

பிக் பாஸ் வாய்ப்பு
ரச்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து மீனாட்சியாகவே நடித்து வந்தார். அந்த சீரியலில் முடிவுக்கு பிறகு
தினேஷ் உடன் நாச்சியார் புறம் எனும் சீரியலில் நடித்தார். அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டதும் அதற்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் இருந்து திடீரென விலகி கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலும் திடீரென முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சீரியல் பற்றியும் சேனல் பற்றியும் பல கோபமான பதிவுகளை ரச்சிதா வெளியிட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் ரச்சிதாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

போட்டியாளர்களின் குற்றச்சாட்டு
ரச்சிதா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு சில சீசன்களாகவே ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாராம். ஆனால் அவருக்கு இந்த சீசனில் தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தன்னுடைய திறமைக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பலர் அவர் உள்ளே நடித்துக் கொண்டிருக்கிறார். வெளியே இருக்கிற மாதிரி உள்ளே கேரக்டரை காட்டவில்லை இவர் கோபமே வராத மாதிரி சிரித்துக்கொண்டே இருக்கிறார் என்று பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்திக் கொண்டே வந்தனர். ஆனாலும் நான் இப்படித்தான் பல்வேறு நிலைமைகளை கடந்து நான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறேன் அதனால் என் மனம் இப்படியே மாறிவிட்டது என்று ரச்சிதா அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார்.

கணவரின் சப்போர்ட்
என்னதான் ரச்சிதாவும் அவருடைய கணவரும் பிரிந்து இருந்தாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவருடைய கணவர் முதல் நாளிலிருந்து ரச்சிதாவிற்கு அதிகமான ஆதரவுக்கு எடுத்துக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்தில் ரச்சிதாவின் விளையாட்டு ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்திருந்தது. காரணம் அவர் தன்னுடைய விளையாட்டை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வந்தார். ஆனால் இந்த நேரத்தில் திடீரென இவர் இன்று வாரத்தில் வெளியேறப் போவது ரச்சிதா தான் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

வெளியான வீடியோ
இந்த நேரத்தில் தினேஷ் தானும் தன்னுடைய மனைவி ரச்சிதாவும் ஒன்றாக நடித்த நாச்சியார் புறம் எனும் சீரியலின் இண்ட்ரொடக்ஷன் பாடலை பதிவிட்டு இருக்கிறார். அதில் ரச்சிதா ரசிகர்களை பார்த்து கையசைக்கும் போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் என்னது ரச்சிதா வீட்டிற்கு வந்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது முன்னாடி எடுத்த வீடியோ என்பது பலருக்கும் தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் அந்த வீடியோவின் கடைசியில் உங்களுடைய சப்போர்ட்டராகவும் ரசிகராகவும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் உண்மையில் பல இதயங்களை வென்றுள்ளீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் உண்மையில் ரச்சிதா தான் இந்த வாரம் வெளியேறுகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி விடச் சொன்னார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications