வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த சிறப்பான செய்கை...இதை எதிர்பார்க்கலையே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிகண்டனுக்கு அவருடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
சரவெடி போட்டு ஆரவாரத்தோடு மணிகண்டனை அவருடைய குடும்பத்தினர் வரவேற்று இருக்கின்றனர்.

தனித்துவமான விளையாட்டு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். தன்னுடைய திறமையை ரசிகர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றும் தன்னுடைய தங்கையின் பெயரை கூறாமல் தான் சாதித்துக் காட்ட வேண்டும் என்றும், கூறி ஆரம்பத்திலிருந்து மணிகண்டன் தன்னுடைய தனித்துவத்தினால் விளையாட்டை விளையாண்டு வந்தார். அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக அவருடைய தங்கையின் பெயரை பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் நடக்கும் வீக் எண்ட் டாஸ்க்களில் தனது திறமையை மணிகண்டன் நிரூபித்துக் கொண்டிருந்தார்.

கூல் கேப்டன்
பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் இதுவரைக்கும் செய்யாத சாதனையை மணிகண்டன் இந்த ஆறாவது சீசனில் செய்து முடித்து இருந்தார். ஐந்து முறை பிக் பாஸ் வீட்டின் தலைவராக பொறுப்பேற்று கூல் கேப்டன் என்கின்ற பட்டத்தையும் மணிகண்டன் பெற்றிருந்தார். பிசிகல் டாஸ்க்கில் மணிகண்டனின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கடந்த வாரம் மணிகண்டன் வெளியேற்றப்பட்டார்.

எதிர்பாராத வெளியேற்றம்
மணிகண்டன் அதிகமாக எலிமினேஷனில் சிக்காமல் இருந்தாலும் இதற்கு முன்பு மணிகண்டன் எலிமினேஷனில் இருக்கும் போது அவருடைய வாக்குகள் ரொம்பவே குறைவாக இருந்தது. ஆனால் அப்போது எதிர்பார்க்காத விதமாக ஜனனி வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அடுத்த வரமும் தலைவர் பதவியை பிடித்துக்கொண்ட மணிகண்டன் அந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சிக்காமல் இருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் எலிமினேஷன் லிஸ்டில் அவருடைய பெயர் வந்தது.

சிறப்பான வரவேற்பு
ஏற்கனவே ஒருமுறை நடந்தது போல இப்போதும் நடந்துவிடும், மணிகண்டனை எப்படியும் வெளியேற்ற மாட்டார்கள் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல கடந்த வாரம் மணிகண்டனின் வெளியேற்றம் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற ப்ரீஸ் டாஸ்க்கில் மணிகண்டனின் குடும்பத்தில் அவருடைய அம்மா, மனைவி, குழந்தை என வந்திருந்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளே வந்திருந்தார். இந்த நிலையில் வெளியே வந்த மணிகண்டனுக்கு சரவெடி வெடித்து அமர்க்களமாக வரவேற்பு ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்படுத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய அண்ணன் வந்ததும் ஓடி சென்று கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிக்காட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications