ஏழைகள் மட்டும் தான் தியாகம் செய்யனுமா? சூழ்நிலைகளை சுயநலமாக மாற்றலாமா?? நீயா நானா கோபியின் விவாதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்ற வாடகைத்தாய் முறையை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் கலந்துரையாடலில் பல விவாதங்கள் சமூக அவலங்களை தோல் உரித்து காட்டுவதாக இருக்கின்றது.
நீயா நானா நிகழ்ச்சியில் வாழ்க்கையில் எதார்த்தத்தையும் ஏழ்மையில் இருப்பவர்களை தங்களுடைய சந்தோஷத்திற்காக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு கோபிநாத் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.

சந்ததியை வளர்க்கும் புதிய முறை
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகி வருகிறது .இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார் .இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வாடகை தாய் முறையை எதிர்ப்போர் மற்றும் ஆதரிப்போர் தங்களுடைய கருத்துக்களை கூறி வந்தனர். பலர் வாடகத்தாய் முறை குழந்தை இல்லாதவர்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்று கருத்து கூறி வந்த நிலையில் தன்னுடைய அல்லது தன் கணவருடைய பிரச்சனையால் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினர் இன்னொரு பெண் மூலம் தங்களுடைய குழந்தைகளை பெற்று எடுத்து வருகின்றனர். இந்த முறை மூலமாக தங்களுடைய சந்ததி வளர்ந்து வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏழைகளுக்கு மட்டும் தான் தியாகமா
இந்த நிலையில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஏழ்மையில் இருக்கும் ஒரு பெண்ணை உங்களுடைய பணத்தைக் காட்டி உங்களுடைய சுயநலத்துக்காக அவருடைய உடலை பயன்படுத்திக் கொள்வது தவறு என்று ஒரு அணுயினரும் எங்களுடைய குழந்தை வேண்டும் என்பதற்காக அவர்களுடன் விருப்பப்படி தான் அவர்களுடைய தேவைகளை சரி செய்து நாங்கள் எங்களுடைய சந்ததிகளை உருவாக்கிக் கொள்கிறோம் என்று இன்னொரு அணியினரும் காரசாரமாக விவாதங்களை செய்து வந்தனர். இந்த நிலையில் ஒரு போட்டியாளர் ஒரு பெண், குழந்தை இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு செய்யும் தியாகமாக தான் வாடகை தாயாக இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார் .இதை கேட்டு காண்டான கோபிநாத் ஆனால் எப்போதும் ஏழ்மையான ஏழைகள் மட்டும் தான் தியாகம் செய்ய வேண்டுமா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

சுயநலமும் பணமும்
பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு குழந்தையை அதுவும் எங்களுடைய குலத்தை தான் நாங்கள் வளர்ப்போம் என்று ஒரு சுயநலத்தோடு ஏழ்மையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பணத்தைக் காட்டி அவர்களை உங்களுக்கு தகுந்தது போல பயன்படுத்திக் கொள்கிறீர்கள். தியாகம் செய்யும் அவர்கள் குழந்தைகளை பெற்று உங்கள் கையில் கொடுத்த பிறகு எவ்வளவு வேதனைகளை அனுபவிக்கிறார்கள் என தெரியுமா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு வசதி படைத்த பெண்ணும் ஒரு தியாகத் தன்மையோடு வாடகை தாயாக இருப்பதில்லை. வசதி படைத்த பெண்ணுக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் ஒரு ஏழ்மையில் இருக்கும் பெண் வாடகைதாயாக மாறுகிறாள். அவளுக்கு வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இப்படி ஒரு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ள தயார் என்று சரி சொல்கிறார் . இந்த நிலைக்கு சமூகம் தான் அந்தப் பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகிறது.

இதைப் பின்பற்றலாமே
குழந்தை இல்லை என்று குறை கூறும் சமுதாயத்தை மாற்ற வேண்டுமே தவிர அந்த சமுதாயத்தை திருப்தி படுத்துவதற்காக ஒரு பெண்ணை கஷ்டப்படுத்தி தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர் எடுத்து கூறி இருக்கிறார். அதோடு வாடகை தாய் முறையை வெறுப்பவர்கள் உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்றால் எத்தனையோ குழந்தைகள் அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் ஏங்கிக் கொண்டு அனாதையாக நிற்கிறது அப்படிப்பட்ட ஒரு குழந்தையை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். அதை விட்டு உங்களுடைய சுயநலம் கௌரவம் அடிப்படையில் தான் என்னுடைய வம்சமே வளர வேண்டும் என்று இன்னொரு பெண்ணை கஷ்டப்படுத்துகின்றனர். தத்தெடுத்து வளர்க்கும் போது ஒரு குழந்தை எந்த மாதிரி சூழ்நிலையில் பிறந்ததோ? எந்த சாதியின் அடிப்படையில் பிறந்ததோ? என எண்ணுபவர்கள் தான் அந்த மாதிரி ஒரு முறையை விட்டுவிட்டு வாடகை தாய் முறையை பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை வாடகை தாய் முறையை வெறுப்பவர்கள் வைத்திருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications