துண்டு துண்டா போன நடிகையின் மானம்.. தெறித்து சொந்த ஊருக்கே ஓட்டம்.. தவறாக வழி நடத்திய பெண்: பிரபலம்
சென்னை: நடிகை அஞ்சலி தன்னுடைய சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்தது குறித்தும், அதிலிருந்து அவரை பாதுகாத்தது யார் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. அத்துடன், பிரபல நடிகை பற்றியும் அதில் சொல்லியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த செய்யாறு பாலு இதுகுறித்து கூறும்போது,"யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு, தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை அஞ்சலி வெளிப்படுத்தினார்.. பெரும்பாலும் அதில், சிங்கிள் டேக்கிலேயே ஷாட்களை ஓகே செய்திருந்தார்.. பிலிம் இன்ஸ்டியூயூடிட்டில் படித்த நடிகை போலவே நடித்திருந்தார்.. இதனால் மொத்த யூனிட்டே கைதட்டி அஞ்சலியை பாராட்டியது.

சித்தியின் கட்டுப்பாட்டில் அஞ்சலி மட்டுமல்ல, இதுபோல பல நடிகைகள் உண்டு.. 90களின் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகை அவர்.. நடிகர் கார்த்திக்குடன் எல்லாம் சேர்ந்து நடித்திருக்கிறார்.. அந்த நடிகை எப்போது செட்டுக்கு வந்தாலும் சோகமாகவே இருப்பார்.. வீட்டுக்கு கிளம்பணும்னு சொன்னாலே மறுபடியும் சோகமாக ஆயிடுவார்..
கட்டாயப்படுத்தினார் என்னுடைய சித்தி
ஒருகட்டத்தில், அந்த நடிகை, பிரபலமான ஒரு சினிமா பத்திரிகைக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி தந்தார்.. அதில், "என்னை என்னுடைய சித்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.. அவருடைய அழுத்தத்தில்தான் வாழ்ந்து வருகிறேன்.. நான் வெளியில் சிரிப்பதெல்லாம் போலி.. என்னை கட்டாயப்படுத்தி, பல காரியங்களை செய்ய சொல்கிறார்" என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்..
அந்த பேட்டி மிகப்பெரிய பரபரப்பாக அன்று பேசப்பட்டது. இத்தனைக்கும் அவர் நடிகையின் சித்தி இல்லை, நடிகையின் வளர்ப்புதாய் ஆவார்.. மும்பையிலிருந்து நடிகையை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் அந்த சித்தி.. பிறகு, அந்த சித்தியின் கட்டுப்பாட்டிலிருந்து உடைத்துக்கொண்டு, மறுபடியும் மும்பைக்கே போய்விட்டார் அந்த நடிகை. இப்போது ஆந்திராவில் பிரபலமானவரை திருமணம் செய்துகொண்டு, நிம்மதியாக இருக்கிறார்..
இயக்குனரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி
அதுபோலத்தான், அஞ்சலியும்.. ஓரளவு வளரும்வரைதான் கட்டுப்பாடுகள் தேவைப்படும்.. பிறகு, தங்களது படங்கள், கதைத்தேர்வு, கால்ஷீட் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வளர்ந்ததுமே, தாங்களாகவே அனைத்தையும் கவனித்துகொள்ள விரும்புகிறார்கள்.. "நான் இல்லாமல் நீ வளர்ந்திருக்க முடியுமா?" என்று சித்தி கேட்க, இப்படி அஞ்சலி - சித்திக்குள் மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஒருகட்டத்தில் அஞ்சலி சினிமாவை விட்டே ஓடிப்போய்விட்டார். எங்கே இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. பிறகு ஒரு தமிழ் பட இயக்குனரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி இருப்பதாகவும், சித்தியையும், அஞ்சலியையும் அவர்தான் ஆட்டுவிக்கிறார் என்றும் பரபரப்புகள் கிளம்பின. உடனே அந்த இயக்குனர் பதறியடித்துக்கொண்டு, விளக்கம் தந்து ஒதுங்கிவிட்டார்.
பாதுகாப்பு தந்த டெரர் தயாரிப்பாளர்
ஆனாலும், சித்தியின் டார்ச்சர் அஞ்சலிக்கு தொடர்ந்து கொண்டேயிருந்தது. சினிமாவே வேண்டாம் என்று ஆந்திராவுக்கே ஒதுங்கியபோதுதான், தெலுங்கில் ஒரு "டெரரான" தயாரிப்பாளர், அஞ்சலிக்கு நம்பிக்கை தந்து நடிக்க வைத்தார்..
யார் யாரெல்லாம் அஞ்சலியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களோ, அத்தனை பேரும் அந்த "டெரர்" தயாரிப்பாளரை பார்த்ததுமே, ஆந்திர எல்லையைகூட மிதிக்க பயந்தார்கள்.. இதற்கு பிறகுதான், பேரன்பு படத்தில் மீண்டும் ராம் அழைத்து வந்தார்.. இது ரீஎன்ட்ரியாக அஞ்சலிக்கு அமைந்தது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications