ஆருத்ரா மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர்..பொண்டாட்டியின் தாலி கூட.. இப்போ மோசமான நிலைமை
சென்னை: சத்யா சீரியலில் குள்ள பூதமாக நடித்த நடிகர் இந்திரன் ஆருத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டதாக கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார்.
இதுவரைக்கும் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் ஆருத்ரா நிறுவனத்தில் தான் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
கடன் வாங்கி, வீட்டை லீசுக்கு விட்டு கொடுத்த பணம் ஏமாற்றப்பட்ட நிலையில் பரிதாபமாக இருக்கும் நடிகர் இந்திரன் யாரும் இதுபோல ஏமாறாதீர்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஆருத்ரா மோசடி இருக்கிறது. இதில் நடுத்தரத்து மக்கள் தங்களுடைய பணத்தை முதலீடாக போட்டுவிட்டு லாபத்திற்காக காத்திருந்த நேரத்தில் அந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி இருக்கிறது.

இந்த வழக்கில் ஆறு கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டிக்காக ஆசைப்பட்ட மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் இதுவரைக்கும் சுமார் 2438 கோடி மோசடி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சின்னத்திரை நடிகரான இந்திரன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் முதலீடு செய்திருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 லட்சம் முதலீடு செய்திருந்தார்களாம். அதில் இந்திரன் தான் சொந்த வீட்டை லீசுக்கு விட்டு அந்தப் பணத்தை இதில் முதலீடு செய்திருக்கிறார். அதுபோல இந்திரனின் மனைவியான வைஷ்ணவியும் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை இதில் முதலீடு செய்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தில் வைஷ்ணவி தான் முதலீடு செய்தாராம். அப்போது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் 4 மாதங்கள் தருவோம் என்றும் முதல் நான்கு மாதத்தில் உங்களுடைய அமௌன்ட் கிடைத்த பிறகு ஐந்தாவது மாதத்தில் இருந்து 12 வது மாதம் வரைக்கும் 25 ஆயிரம் ரூபாய் தருவோம் என்றும் கூறினார்களாம். அதுபடி ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்து வந்ததாம்.

அதற்குப் பிறகு வைஷ்ணவி அக்கம் பக்கத்தில் கொஞ்சம் கடன் வாங்கி இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார். இவர் நிதி முதலீடு செய்த அடுத்த மாதமே அங்கே ரைடு வந்து பிறகு பிரச்சினையாகி அதற்குப் பிறகு பணம் வருவது நின்று விட்டதாம். தங்களுடைய திருமணம் காதல் திருமணம் என்றும் திருமணத்திற்கு போது இந்த பண பிரச்சனையால் அதிக அளவில் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும் இப்போது கூட வாங்கிய கடனை கட்ட முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுவதாகவும் கூறி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தனக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்தது என்றும், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலியை கூட பிரித்துக் கோர்க்க முடியவில்லை. அடகு வச்ச நகை எல்லாம் திருப்ப முடியவில்லை என்று வேதனையோட நடிகர் இந்திரன் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எங்களை போல இனி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications