முடிவுக்கு வரும் ராஜா ராணி சீரியல்.. கிளைமாக்ஸ் தான் எதிர்பார்க்காதது.. நீங்க நினைத்தது இல்லை.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் முடிவடைய போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த மாதத்தோடு முடிவடையும் ராஜா ராணி சீரியலில் கிளைமாக்ஸ் தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கப் போகிறதாம்.

அது மட்டுமில்லாமல் இந்த சீரியலின் டிஆர்பி குறைவடைந்ததால் இந்த முடிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 Wht is the climax story of Vijay TV Raja Rani serial which is ending

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பிற மொழி தழுவல் என்பது பலருக்கும் வெளிச்சமானதுதான். இந்த சீரியல் ஏற்கனவே பிற மொழியில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட," என் கணவன் என் காதலன்" எனும் சீரியலின் காப்பியாக இருந்தாலும் இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதிலும் ஆலியா மானசா கம்பேக் கொடுத்து இந்த சீரியலில் ஆரம்பத்தில் அதிரடி காட்டி இருந்தார். ஆனால் திடீரென்று அவர் விலகிய பிறகு அவரை தொடர்ந்து அடுத்ததாக ரியா நடித்து வந்தார்.

இப்போது ரியாவும் சீரியலில் இருந்து திடீரென்று விலகி, அவருக்கு பதில் ஆஷா கவுடா சந்தியாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு பெற்று இருந்தாலும் போகப் போக அடிக்கடி கதாநாயகி மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில
சீரியல் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வர தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே சீரியல்களுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வருவது ஒன்றும் புதியது அல்ல.

இருந்தாலும் இந்த சீரியலில் இயக்குனராக இருந்த பிரவீன் பென்னெட் திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். அதனாலேயே என்னவோ தற்போது இந்த சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பார்வதியின் முன்னாள் காதலன் பார்வதியிடம் தவறாக நடக்க முயன்றதால் அவரை சந்தியாவின் மாமியார் ஆன சிவகாமி அடித்துக் கொன்று விடுகிறார்.

 Wht is the climax story of Vijay TV Raja Rani serial which is ending

சிவகாமி கொலை செய்த விக்கியின் கொலை வழக்கை சந்தியா விசாரித்து வருகிறார். ஆனால் சிவகாமியின் மொத்த குடும்பமும் இந்த கொலையை மறைப்பதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சரவணன் வாங்கிய புது சட்டையின் விவரம் சந்தியாவிற்கு தெரிய வந்திருப்பதை தொடர்ந்து சரவணன் மூலமாக யார் கொலை செய்தார் என்பதை சந்தியா தெரிந்து கொள்வாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சந்தியா சிவகாமி தான் கொலை செய்தார் என்றதை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்கப் போகிறார் என்றும் சிவகாமி ஜெயிலுக்கு போவது போன்று இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்றும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் எப்படியாவது இப்பவாது இந்த சீரியலை முடிக்க வேண்டும் என்று முடிவு கொண்டு வந்தீங்களே அதுவே நல்லது என்று ரசிகர்கள் வழக்கம்போல நக்கலாக கமாண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+