"37 வயது வரை திருமணம் செய்து வைக்கவில்லை” நடந்தது இதுதான்.. ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கூறிய ரகசியங்கள்
சென்னை: நடிகர் ராஜ்கிரண் மீது அவருடைய வளர்ப்பு மகள் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவிற்கு 37 வயது வரைக்கும் திருமணம் செய்து வைக்காமல் அவர்களுடைய வீட்டிலே வேலைக்காரி போல தான் நடத்தி வந்ததாகவும் அதனால்தான் சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்ய காரணம் என்ற தகவல்களை கூறி இருக்கிறார்.

சொந்த மகள் இல்லை
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவின் திருமணம் பலருக்கும் தெரிந்ததுதான். அவர் நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகளை திருமணம் செய்திருந்தார் என்ற செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தன்னுடைய மனைவி ராஜ்கிரண் "சொந்த மகள் இல்லை", "ராஜ்கிரனின் மனைவியோட மகள்" என்று அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். முனீஸ் ராஜாவின் மனைவி பிரியாவின் சொந்த அப்பா இப்போ இவர்கள் கூடத்தான் இருக்கிறாராம். அவரும் பிரியாவின் சொந்த அம்மாவான பத்மஜா என்ற கதீஜாவும் 18 வருஷமாக கணவன் மனைவியாக வாழ்ந்தார்களாம். ஆனால் அதற்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பத்மஜா தன்னுடைய கணவரை பிரிந்து நடிகர் ராஜ்கிரணுடன் உடன் சேர்ந்து வாழ்ந்தாராம். அப்போ முனீஸ் ராஜாவின் மனைவி சின்ன குழந்தையாம்.

கம்ப்ளைன்ட் கொடுக்க காரணம்
அப்போது சின்ன குழந்தையாக இருந்த பிரியாவையும் அவர்கள் கூடவே கூட்டிட்டு போயிட்டாங்களாம். அப்போ பத்மஜா மட்டும் இல்லாமல் பிரியாவும் நிறைய நகைகளை அணிந்திருந்தாராம். அந்த நகைகளுடன் தான் ராஜ்கிரணுடன் அவர் போய்விட்டாராம். இப்போ ராஜ்கிரண், பிரியா என்னோட மகளே இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு அவங்க போட்டு இருந்த நகைகள் மட்டும் எதற்கு அந்த வீட்டில் இருக்கணும் என பிரியாவின் சொந்த அப்பாவும் பிரியாவும் சேர்ந்து அந்த நகைகளை கேட்டார்களாம். அதுக்கு தான் இப்போது ராஜ்கிரண் சொல்லி பத்மஜா இவர்களின் மீது புகார் தந்து இருப்பதாக முனீஸ் ராஜா குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

ராஜ்கிரணின் மனைவி கொடுத்த வழக்கு
இந்த நிலையில் தற்போது ராஜ்கிரண் இரண்டாவது மனைவி கதீஜா சென்னையில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் நகைகளை எடுத்துக்கொண்டு சென்ற பிரியா மற்றும் முனீஸ் ராஜா மற்றும் பிரியாவின் உண்மையான அப்பா இளங்கோவன் ராஜ்கிரணின் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டிருந்திருக்கிறார்.அதுபோல பிரியா எவ்வளவு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார் என்ற தகவல்களையும் தான் விரைவில் வெளியிடுவேன் என்று பத்மஜா கூறியிருக்கிறார்

கண்ணீரோடு வேண்டுகோள்
இந்த நிலையில் இந்த வழக்கிற்காக ஆஜரான முனீஸ்வரன் மற்றும் அவருடைய மனைவி பிரியா இருவரும் தன் தரப்பு நியாயங்களையும் தெரிவித்து விட்டு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், தனக்கு 37 வயது வரைக்கும் திருமணம் செய்து வைக்காமல் அந்த வீட்டில் அடிமையாக வேலைக்காரி போல நடத்தி வந்தார்கள்.வேலை செய்வதற்காக தான் என்னை அந்த வீட்டில் வைத்து வந்தனர். ஆனால் இப்போது என்னுடைய உண்மையான அப்பா மற்றும் பாட்டி எனக்கு தந்த 40 பவுன் சவரன் நகையும் அந்த வீட்டில் இருக்கிறது. அது எனக்கு வேண்டும் அதுபோல என்னை என்னுடைய கணவரோடு நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கைகூப்பி கண்கலங்க பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications