அந்தக் கனவு நினைவாக வேண்டும்.. மகாலட்சுமி செய்த செயல்..சிறப்பான முடிவு தான்.. குவியும் வாழ்த்துக்கள்
நடிகை மகாலட்சுமி தான் செய்த யாகம் பற்றி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு சண்டி ஹோமம் நடத்தி இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு அதிகமாக கோவில்களுக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் தான் செய்த ஹோமத்தின் காரணம் என்ன என்பது பற்றி மகாலட்சுமி வெளியிட்ட கருத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சர்ச்சைகளை கண்டு கொள்வதே இல்லை
தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் விஜே மகாலட்சுமி தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பேசப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார். சர்ச்சைகளில் அடிக்கடி மகாலட்சுமியின் பெயர் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்து அவருடைய பயணத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துள்ளார்.

எளிமையான திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் இவர்களுடைய திருமணத்தை எளிமையாக திருப்பதி கோயிலில் வைத்து முடித்திருந்தனர். திருமணம் முடிந்த பிறகு தங்களுடைய திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இவர்கள் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் அந்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரல் ஆகிவிட்டது. நெட்டிசன்களால் இவர்களுடைய புகைப்படம் கலாய்க்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் அதில் இடம்பெற்று கொண்டிருக்கிறது.

பரபரப்பு ஏற்படுத்தும் புகைப்படங்கள்
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர், இவர்களுடைய திருமணம் இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தும் என்று இவர்கள் இருவரும் எதிர்பார்க்கவே இல்லையாம். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி போட்டோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஐடியில் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு சில யூடியூப் களில் கூட தங்களுடைய திருமணத்தை பற்றியும் தங்களுடைய காதல் வாழ்க்கையை பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார்கள். இதை வைத்து நெட்டிசன்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை கண்டு கவலைப்படாமல் இருந்து வந்தாலும் மகாலட்சுமியின் ரசிகர்கள மகாலட்சுமிக்காக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஹோமம் தொடங்கியது
இந்த நிலையில் மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு சேர்ந்து சண்டி ஹோமம் நடத்தி இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து," மிகப்பெரிய மற்றும் சிறந்த ஹோமங்களில் ஒன்று சண்டி ஹோமம். நாம் நம்மை நம்பி அளவற்ற அன்பு செலுத்தும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். என் நண்பர்கள் பட்டியலில் உள்ள ஒவ்வொருத்தரின் கனவும் நனவாக வேண்டும். அதற்காகத்தான் இந்த ஹோமம் என்று அவர்கள் பதிவிட்டிருக்கின்றனர். தற்போது இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications