ஜீ தமிழ் சீரியலை விட்டு விலகிய கதாநாயகி.. தொடங்கிய சில மாதங்களில் இப்படி ஒரு முடிவா? இது ஒரு காரணமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கதாநாயகியாக சக்தி கேரக்டரில் நடித்து வந்த மோக்ஷிதா அந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சீரியலின் கதாநாயகியின் பதிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சீரியல் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இப்படி ஒரு மாற்றம் எதனால் என்று பலரும் குழப்பத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அம்மா மகள்களின் கதை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 2022 இல் தான் ஒளிபரப்பானது. இந்த சீரியலின் கதாநாயகியாக மோக்ஷிதாபாய் முதல் முறையாக அறிமுகமாகிறார். இந்த சீரியலின் கதாநாயகனாக ஆரியன் நடிக்கிறார். மீனாட்சியாக நடிகை அர்ச்சனா நடிக்கிறார். அவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். மீனாட்சி கணவர் தன்னை விட்டு பிரிந்து போய் சென்ற பிறகு மூன்று மகள்களையும் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்கிறார் என்பதை பற்றியும் அம்மா மகளுக்கு இடையே உள்ள பாச போராட்டங்களை பற்றியதாகவும், ,இந்த சீரியல் இருந்து வருகிறது. இதில் காதல், மோதல், பாசம் என அனைத்தும் கலந்து இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென கதாநாயகி விலகி இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

உருக்கமான பதிவு
மோக்ஷிதாவின் பதிவில், "நான் சக்தியாக நடித்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக வெளியே வந்து விட்டேன் என்பதை எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். எனது சக நடிகர்கள் அனைவரும் எனக்கு பெரும் ஆதரவாக உள்ளனர். மேலும் எனது தமிழ் ரசிகர்கள் அனைவரும் என்னை சக்தியாக ஏற்றுக் கொண்டு இவ்வளவு அன்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. தமிழ் உட்பட பல விஷயங்களையும் இங்கே வேலை பார்த்து நான் கற்றுக் கொண்டேன். எல்லா வகையிலும் என்னை ஊக்குவித்து அனைவருக்கும் நன்றி" என்று உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார். திடீரென இவர் இந்த ஒரு முடிவை எடுத்தது இந்த சீரியலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், இனி இவருக்கு பதில் யார் வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னட சீரியல் நாயகி
மோக்ஷிதா கன்னடா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் மொழிபெயர்ப்பில் கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பார்வதி கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலமாகத்தான் அதே செம்பருத்தி சீரியலை இயக்கிய இன்சிட்யூஸ் மீடியா மீனாட்சி பொண்ணுங்க சீரியலையும் தயாரித்து வருகிறது. அதில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சக்தி கேரக்டரில் இவர் இந்த சீரியலில் ஒரு போல்டான கேரக்டரில் நடித்திருந்தார். தன்னுடைய அம்மாவின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்றும் தன்னுடைய கலெக்டர் கனவை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இவர் படித்துக் கொண்டே தன்னுடைய குடும்பத்தையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இவரை காதலித்து வந்த வேலு செய்த சில செயல்களால் இவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த பிரச்சனைகளின் காரணமாக கதை பயணித்து வருகிறது .திடீரென சக்தி சீரியலை விட்டு விலகுவதால் இனி எப்படி இருக்க போகிறதோ என தெரியவில்லை என இந்த சீரியலின் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

துணை நடிகர்களின் வருத்தம்
இந்த நிலையில் இந்த சீரியலில் மோக்ஷிதா விலகியதால் இவருக்கு பதில் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகி ரேஷ்மா நடித்தால் நன்றாக இருக்கும் என்று சீரியல் ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் சக்தியின் அக்காவாக யமுனா கேரக்டரில் காயத்ரி யுவராஜ், துர்காவாக நடிக்கும் பிரணிகா மற்றும் இவர்களின் அம்மாவாக மீனாட்சியாக நடிக்கும் அர்ச்சனா உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மோக்ஷிதா தன்னுடைய முடிவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சீரியல் அணியினர் அனைவரும் மிஸ் யூ என தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications