Barathi kannamma serial: எதற்கெடுத்தாலும் கை நீட்டுவதா? என்ன பொம்பளைங்கடா...!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கதையை என்ன நோக்கத்தில் எப்படி எழுதறாய்ங்க தெரியலையே...
பொண்டாட்டி கண்ணம்மாவை வீட்டுக்குள் விட்டால்தான் ஆச்சுன்னு பாரதி உண்ணாவிரதம் இருக்கான்.
என்னதான் உண்ணாவிரதம் இருந்தாலும், கண்ணம்மாவை உள்ளே விடமாட்டேன்னு பாரதியின் அம்மாவும் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்காங்க.

கண்ணம்மாவின் சித்தி கொடுமை
எதுவும் அறியாத கண்ணம்மா வீட்டில் கை கால் வராத அப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிகிட்டு இருக்கா. அண்ணன், அம்மா சாப்பிடாம இருக்காங்க... அதனால், தம்பி தன்னுடைய பொண்டாட்டியும் சாப்பிடாம இருக்கணும்னு சொல்லிட அஞ்சலி அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிடறா.

சித்திக்கு கோவம்
பொண்ணு அஞ்சலி சாப்பிடலை, தன்னையும் சாப்பிட வேணாம்னு சொல்லிட்டா.. செய்து வச்ச அசைவ உணவு அத்தனையும் சாப்பிட முடியலைன்னு கோவம் வந்து அத்தனை கோபத்தையும் கண்ணம்மா மேல காமிக்க போகும் சித்தி, பொளேர்னு ஒரு அறை விட்டு, உன் புருஷன் உன்னை வீட்டுக்கு அழைச்சுட்டு போக உண்ணா விரதம் இருக்க, நாங்க பட்டினி கிடக்கணுமாடின்னு கேட்கறாங்க. இதுதான் சித்தி கொடுமை.

படிச்ச பையன்
டாக்டருக்கு படிச்ச ஒரு பையன் தன்னோட பொண்டாட்டியை வீட்டுக்கு அழைச்சுட்டு போக தைரியம் இல்லாம உண்ணாவிரதம் இருக்கானாம். அவனுக்கு எதிரா அவங்க அம்மா உண்ணாவிரதம் இருக்காங்க. அம்மாவை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்க தைரியம் இருந்த பாரதிக்கு பொண்டாட்டியை அழைச்சுட்டு வர தைரியம் இல்லையா?

பொய்யான சான்றிதழ்
குழந்தை இல்லைன்னு பொய்யான சான்றிதழை வச்சு அம்மா வெளியே துரத்திடறாங்க. அதை பொய்யின்னு நிரூபிக்க பாரதிக்கு வழி தெரிஞ்சும் முட்டாள் மாதிரி கதை எழுதிக்கிட்டு இருக்கறாங்க. பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு பொய்யான சான்றிதழ் கொடுத்து நம்ப வச்சு இருக்கா வெண்பா. இதை சொல்லியாவது கண்ணம்மாவை ஏத்துக்க சொல்ல பாரதிக்கு தைரியம் வராதது ஏன்?

கதையில் பல ஓட்டை
பாரதி கண்ணம்மா சீரியல் கதையில் பல ஓட்டைகள் இருக்குது. நேரம் போகட்டுமே என்று கதையை எழுதி பல பேர் சேர்ந்து அதை ஷூட் செய்து, பலரை பார்க்கக் வச்சுக்கிட்டு இருக்காங்க. இருந்தாலும், அம்மாவை எதிர்த்து கல்யாணமே செய்துகிட்டு வர துணிந்தவனுக்கு அம்மா வீட்டை துரத்தின பொண்டாட்டியை அழைச்சுட்டு வர தெரியாதா? இதுக்கு ஒரு உண்ணாவிரதமா?

சித்தி கொடுமை
என்னதான் சித்தி என்றாலும், அடிக்கடி ஒரு கல்யாணமான பெண்ணை பணக்கார டாக்டர் பையனுக்கு கட்டி வைக்கப்பட்ட பெண்ணை பொளேர் பொளேர் என்று அடிக்கடி அடிப்பதும், அதை அந்த பெண் வாங்கிக்கொண்டு நிற்பதும் கதைக்கு என்றாலும் ஏற்றுக்கொள்ளும்படியா இருக்கிறது? இதை எல்லாமாவது கதையில் மாற்றிக் கொள்ளக் கூடாதா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications