எதிர் நீச்சலில் இனி குணசேகரன் வரமாட்டாரா? அவரே கொடுத்த ஹிண்ட்.. கதை இனி இப்படி தானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் போலீசை அடித்ததற்காக குணசேகரனை போலீஸ் அரஸ்ட் செய்து ஜெயிலுக்கு போகிறார்.
அதே நேரத்தில் நேற்றைய முன்தினம் எபிசோடில் குணசேகரன் கேரக்டர் வரவில்லை. இந்த நிலையில் இனி குணசேகரன் கேரக்டர் அதிகமாக இருக்காது என்று தெரிகிறது.

அதுபோல வேலராமமூர்த்தி ஓவர் பில்டப்புக்கு பிறகு கடந்த வாரம் தான் குணசேகரனாக நடிக்க தொடங்கி இருந்தார். அதே நேரத்தில் இனி அவர் அதிகமாக சீரியலில் இருக்க மாட்டார் என்று தெரிகிறது அது பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணமாக குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில், அவருடைய திடீர் மரணத்திற்கு பிறகு அந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இனி குணசேகரன் கேரக்டர் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகமும் இருந்தது. எல்லாவற்றிற்கும் பல வாரங்கள் கழித்து தான் விடை கிடைத்தது.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வேல ராமமூர்த்தி குணசேகரன் கேரக்டரில் அறிமுகமானார். முதல் நாளே அவருடைய காட்சிகள் மிரட்டலாக இருந்தது. இதுவரைக்கும் குணசேகரன் செய்யாத செயலை வேலராமமூர்த்தி செய்திருந்தார். அதாவது போலீஸ் ஆபீஸரை எட்டி மிதித்து தன்னுடைய வில்லத்தனத்தை காண்பித்து இருந்தார். அப்போதே வீட்டிற்கு வந்ததும் அவர் என்னை தேடி போலீஸ் வரும் நான் ஜெயிலுக்கு போக போறேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே இதுவரைக்கும் குணசேகரன் செய்யாத செயலை இப்போது புது குணசேகரன் செய்து விட்டார் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரியின் கன்னத்தில் அடித்த குணசேகரன் இனி என்னுடைய தம்பி ஞானம் மற்றும் கதிர் தான் இந்த வீட்டில் எல்லாத்தையும் பார்த்துக்க போறாங்க. நான் அவங்கள வழிநடத்த போறேன் என்றும் சொல்லியிருந்தார். அதையும் பலர் கவனித்திருக்கலாம்.
அதுபோல தற்போது நேற்று போலிஸ் ஆபிசர் வந்ததும் தான் ஜெயிலுக்கு போயிட்டு வருகிறேன். இந்த குடும்பத்தை நீதான் இழுத்து பிடிச்சுக்க வேண்டும் என்று மீண்டும் கதிரிடம் குணசேகரன் சொல்லிக்கொண்டு கிளம்புகிறார். இதனால் குணசேகரனுக்காக நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு கால் சீட்டு பிரச்சனை இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. காரணம் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வேலராம மூர்த்தி நடிக்கிறாரா? என்று கேட்டபோது கூட எனக்கு கால்சீட் பிரச்சனை இருக்கிறது என்று கூறி இருந்தார்.

அதுபோல இப்பொழுது கால்ஷீட் பிரச்சினை இருப்பதால்தான் குணசேகரன் ஆக இவர் அதிகமாக இந்த சீரியலில் கவனத்தை செலுத்த முடியாது என்று தோன்றுகிறது. கதிர் மற்றும் ஞானம் தான் இனி இந்த சீரியலில் முக்கிய வில்லனாக இருந்து கொண்டு இவரிடம் அடிக்கடி அட்வைஸ் மட்டும் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முன் தினம் எபிசோடில் கூட குணசேகரன் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் மருமகள்களை அடித்து மிரட்டி விட்டு அம்மாவை சாப்பாடு செய்ய சொல்லி எனக்கு தூக்கம் வருகிறது நான் தூங்க போகிறேன் என்று சொல்லி இருந்தார்.
பிறகு மாடியில் கதிர் மற்றும் நந்தினி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போதும் கூட குணசேகரன் அந்த இடத்தில் வரவில்லை. அந்த சீனில் முக்கியமாக குணசேகரனும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் தூங்குகிறார் என்று சொல்லி கதையை நகர்த்தி விட்டனர். இப்படித்தான் இனி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் இருக்க போகிறது போல. ஆனாலும் நேற்று ஜெயிலுக்கு போன குணசேகரன் இனி ஜெயிலில் இருந்து எப்போது வரப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications