மாலையும் கழுத்துமாக நின்ற ஜெயம் ரவி.. பக்கத்துல அது யாரு.. ஒரு நொடி குழம்பிய இணையம்.. செம வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதிக்குள் குடும்ப சண்டை விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், இணையத்தில் ஒரு போட்டோ வெளியாகியிருக்கிறது. ஜெயம் ரவி மாலையும், கழுத்துமாக நிற்பதை கண்டு, இணையவாசிகள் குழம்பி கிடக்கிறார்கள்.. என்ன நடந்தது?

ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் புகைந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை. தனக்கிருக்கும் பிரச்சனைகளை ஜெயம் ரவி வெளிப்படையாக சொல்லியிருந்ததுடன், ஆர்த்தி மீதான சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருநதார்.

television jayam ravi aarthi

திடீர் அறிக்கை: ஆனால், இந்த குற்றச்சாட்டகளுக்கு சில தினங்களாகவே மவுனம் காத்து வந்த ஆர்த்தி, 2 நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்..

அதில், "தான் அமைதியாக இருப்பதற்கு குற்ற உணர்ச்சியோ, பலவீனமோ காரணம் இல்லை.. நீதித் துறை மீது நம்பிக்கை இருக்கிறது.. திருமணத்தைப் புனிதமாகக் கருதுவதால், இது தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை" என்றார். அதாவது, ஜெயம் ரவியுடன் பேசக் காத்திருப்பதாகவும், அவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அந்த அறிக்கை இருப்பதாக தெரிகிறது.

என்ன காரணம்: ஆர்த்தியின் இந்த திடீர் சமாதான நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், பொன் முட்டை இடும் வாத்து போல ஜெயம் ரவி இருப்பதால், அவரை பிரிந்து செல்ல மனமில்லாமல் சமாதானத்துக்காக இறங்கி வருவதாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரும் கருத்து கூறியிருந்தார்கள். எனினும், ஆர்த்தியின் அறிக்கை தொடர்பாபக ஜெயம் ரவி எந்த பதிலையும் இதுவரை சொல்லவில்லை.

மாறாக, தன்னுடைய படவேலைகளில் பிஸியாக இறங்கிவிட்டார்.. அதுமட்டுமல்ல, மும்பையில் புது ஆபீஸ் ஒன்றை நிறுவியுள்ள ஜெயம் ரவி, தன்னுடைய தமிழ் படங்களுக்கான பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறாராம்.. இதற்காக மும்பையிலேயே அவர் தங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

பிரதர் படம்: தன்னுடைய தமிழ் படங்களை பான் இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம்.. அதேபோல பிரதர் படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன், ப்ரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

இந்த மாத இறுதியில் இந்த படம் வெளிவர உள்ளது.. எனவே கடந்த சில நாட்களாகவே, பிரதர் படத்தின் புரமோஷன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. ஆடியோ ரிலீசுக்கு பிறகு, இன்ஸ்டாகிராமிலும், பிரதர் படத்தினை புரமோட் செய்து வருகிறார் ஜெயம் ரவி.

கழுத்தில் மாலை: இந்நிலையில் ஜெயம் ரவியும், ப்ரியங்கா மோகனும் கழுத்தில் மாலை அணிந்தபடி ஒரு போட்டோ வெளியாகியிருக்கிறது.. இந்த ஜோடியை பார்த்ததுமே இணையவாசிகள் குழம்பி போய்விட்டார்கள். இதென்ன அதுக்குள்ள திருமணம் நடந்துவிட்டதா? என்று கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், இது பிரதர் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ என்பது தெரியவந்ததையடுத்து, நெட்டிசன்களும், ஜெயம் ரவியின் ரசிகர்களும் திரண்டு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

குடும்ப விவகாரம் ஒருபக்கம் பற்றிக்கொண்டு எரிய, பாலிவுட்டில் காலூன்றும் முயற்சி, பிரதர் பட புரமோஷன் என பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறாராம் ஜெயம் ரவி...!

இந்த படத்தில், கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள்.. ஏற்கனவே "மக்காமிஷி" என்ற பாடல் கடந்த ஜூலையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹெத்தையம்மா என்ற பாடல், அதற்குள்ளாகவே நீலகிரி பழங்குடி மக்களின் அதிருப்தியை பெற்று, சர்ச்சையில் சிக்கி வருகிறது.. எனினும், தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+