மாறுவேடத்தில் நடிகர் ஜாலி.. அப்ப சங்கீதா? விஜய் TV பிரியங்கா லண்டன்ல செட்டில்? பிரபலம் சொல்றது நிஜமா
சென்னை: பிரியங்காவின் அம்மாதான், மகளின் எதிர்காலம் நினைத்து கவலைப்பட்டு, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் பிரியங்காவும் ஒப்புக் கொண்டுள்ளார். பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழர்.. லண்டனில் புகழ்பெற்ற இசைக்குழு வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.. அத்துடன், விஜய் குறித்தும் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு, Kingwoods news என்ற யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார்..

"கடந்த தேர்தலில் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்ததற்கு காரணம் வெறும் 3 சதவீதம் வாக்குகள்-. இந்த வாக்குகளை விஜய்யை கொண்டு மீட்டெடுக்க அதிமுக முயற்சிக்கிறது. அந்தவகையில் சிறுபான்மையினர் ஓட்டு உட்பட விஜய மூலம் 10 சதவீத வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.
100 சீட் கேட்டாரா விஜய்
ஆனால் விஜய், எடப்பாடியிடம் 100 சீட் கேட்கிறார்.. மிச்சமுள்ள 134 சீட்டுகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யட்டும் என்று எடப்பாடி கேட்கிறார்.. எனவே, அதிமுகவுக்காக 150 சீட்டுக்களை வைத்து கொண்டு, மிச்சம் 84-ஐ விஜய் உட்பட கூட்டணிக்கு பிரித்து தர எடப்பாடி நினைக்கிறார்.. பாஜகவிடமும் இதே டீல்தான் பேசுகிறார். 150 கையில் இருந்தால்தான், 118 சீட்டில் வெற்றி பெற முடியும், முதல்வராவதற்கு யாரிடமும் கையேந்த வேண்டிய நிலைமை வராது என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார்.
எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. எனவே, விஜய் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்காது. விஜய் 1 மணி நேரம்கூட வெயிலில் இருக்க மாட்டார்.. கேரவனில்தான் இருப்பார்..இப்போது திமுகவுக்கு ஜுரம் வந்துவிட்டது.. விஜய் தனித்து நின்றால் மட்டுமே திமுகவுக்கு லாபம்.. இல்லாவிட்டால் திமுக ஓட்டு பிரியும்" என்று கணித்து கூறியிருந்தார்.
பிரியங்காவின் 2வது திருமணம்
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன். அதில், விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.. பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி என்பவர் ஈழத்தமிழராம்.. இவர் லண்டனில் குடியிருந்து வருவதால், பிரியங்காவும் திருமணத்துக்கு பிறகு லண்டன் சென்று தங்கிவிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழா தமிழா பாண்டியன் மீண்டும் விஜய் பற்றி பேசி பதில் தந்துள்ளார்..
"வசி ஒரு ஈழத்தமிழர்.. லண்டனில் வசித்து வருகிறார்.. லண்டனிலேயே அவருக்கு குடும்பம் உள்ளது.. இசைக்குழுவை லண்டனில் வைத்து நடத்தி வருகிறார்.. வசியின் அண்ணனும் இதே இசைக்குழுவில்தான் உள்ளார்..
பிரபலமான இசைக்குழு
ஐரோப்பாவிலேயே மிகவும் பிரபலமானது இவர்களின் இசைக்குழு.. அதற்காக பிரியங்கா திருமணத்துக்க பிறகு லண்டனில் செட்டில் ஆகிவிடுவாரா என்று சொல்ல முடியாது. பிரபலங்களுக்கு கனடா லண்டன் செல்வதெல்லாம் இப்போது தி.நகர், வடபழனி போவது போல ஆகிவிட்டது.
நடிகர் விஜய் மாறுவேடத்தில் பாரீஸில் சுற்றியிருக்கிறார்.. அதுவும் கடந்த வாரம் பாரீஸ் போயிருக்கிறார்.. ஈழத்தமிழர் பலர் அவரை பாரீசில் பார்த்திருக்கிறார்கள்.. அங்கே ஷாப்பிங் மால் போயிருக்கிறார் விஜய்.. கேசினோ விளையாடியிருக்கிறார்.. சங்கீதா, மகனை விட்டுவிட்டு, தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருக்கிறார். ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்துள்ளார்.. பாரீஸ் ஒரு இன்டர்நேஷனல் ரொமான்ஸ் சிட்டி.. காதலுக்கான மொழி பிரெஞ்ச் என்பார்கள்..
விஜய்க்கு மன அழுத்தம்
விஜய்க்கு மன அழுத்தம் காரணமாக ஒரு வாரம் பாரீஸ் சென்றுவிட்டார்.. காரணம், கூட்டணி சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.. அத்துடன் சென்னைக்கு அமித்ஷா வந்ததுமே பாஜகவில் சேர்ந்துவிட்டார். இப்போது விஜய்க்கு பாஜக அழுத்தம் தரக்கூடும்.. இந்த நேரத்தில்தான் ஒரு வாரம் ரிலாக்ஸாக இருந்துவிட்டு வந்துள்ளார் விஜய்.. இந்த செய்தி யாருக்குமே தெரியாது.
பிரான்ஸிலிருந்து நண்பர்கள் எனக்கு இந்த விஷயத்தை சொன்னார்கள். தி.நகருக்கு ஷாப்பிங் போவதை போல பாரீஸ் சென்று ஷாப்பிங் செய்துள்ளார் விஜய்.. அதனால், லண்டன் செல்வதெல்லாம் பிரியங்கா, வசிக்கு சர்வசாதாரணம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications