ஆயிரம் கோடி அள்ளுதா விஜயின் ஜனநாயகன்? இப்படியொரு சீன் படத்தில் இருக்காமே.. சர்ப்ரைஸால் ரசிகர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பிறந்தநாளுக்காக அவர் நடித்துள்ள ''ஜன நாயகன்'' படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோவை) படக்குழு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியான 24 மணிநேரத்தில் 32.4 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்றது. கிளிம்ஸ் வீடியோ வெளியாகி 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையையும் ஜனநாயகன் படம் பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விஜய குறித்தும், ஜனநாயகன் படம் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "விஜய் நடிக்க வந்து 33 வருடங்களாகவிட்டது. நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் நடித்தபோதே விமர்சனங்கள் எழுந்தன.. "இவரெல்லாம் ஒரு நடிகரா? தயாரிப்பாளர், டைரக்டரின் மகன் என்பதால், நடிக்க வந்துள்ளார், இவரெல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது" என்று காதுபடவே பலர் பேசினார்கள்.

Television jana nayagan rs1000 crore

பிறகு ரசிகன் படத்தின்போது, ஒரு பிரபல பத்திரிகை விஜய்யை பாடிஷேமிங் செய்தது.. இப்படி அனைத்து விமர்சனங்களையும் முறியடித்து மேலே வந்தார் விஜய்.. பிறகுதான் பூவே உனக்காக படம் விஜய்க்கு பெரிய அடையாளத்தை தந்தது.. காதலுக்கு மரியாதை படம் வந்தபிறகு, வேற மாதிரியான ரசிகர்கள் சேர்ந்தனர்..

துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல மென்மையான, காதல் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது, விஜய்க்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தது.. கில்லி, சிவகாசி, திருமலை போன்ற படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்த்தியது.. புதுமுக இயக்குனர்களுக்கு நம்பிக்கை வைத்து படம் செய்ய உதவியவர் விஜய்.. இன்று அட்லி நட்சத்திர இயக்குனராக இருப்பதற்கு காரணமே விஜய்தான்..

லோகேஷ் கனகராஜூக்கு தன்னுடைய கேரியரில் நட்சத்திர இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்த்தியது விஜய்தான்.. விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்தபோது, அவர் கேட்ட பெரிய சம்பளத்தை தரும்படி சொன்னது விஜய்தான்.. இதற்கு பிறகுதான், பல மொழிகளில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பெரிய சம்பளம் பெற முடிந்தது.

விஜய் டான்ஸ்

ஆரம்ப கால படங்களிலிருந்து இப்போதுவரை டான்ஸில் விஜய்யை அடித்து கொள்ளவே முடியாது.. பட்டைய கிளப்பிடுவார்.. விஜய் அளவுக்கு இந்திய அளவுக்கு ஆடக்கூடிய நடிகர் வேறு யாருமே இல்லை.. எல்லாவிதமான ஆக்ஷன் சண்டைகளையும் விஜய் செய்யக்கூடியவர்.. தளபதி, இளைய தளபதி போன்றவற்றை கடந்து "விஜய் அண்ணா" என்று அவரை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதுதான் விஜய்க்கு பெரிய பிளஸ்.

கடைசி படம் ஜனநாயகன் என்று அறிவித்துவிட்டதால், விஜய் ரசிகர்களுக்கு அது ஏக்கத்தையே தந்துள்ளது.. தவெக என்ற கட்சி தலைவராக வந்துவிட்டாலும், தொடர்ந்து விஜய் படங்களில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஜனநாயகன் படம்

ஜனநாயகன் படத்தில் அரசியல் முழுமையாக இருக்கும் என்கிறார்கள்.. கமர்ஷியல் படமாகவும், விஜய் படமாகவும், அரசியல் படமாகவும் இருக்கும்.. ஏஆர் ரஹ்மானுக்கு பிறகு அனிருத்தைதான் அனைத்து இயக்குனர்களும் தேடி செல்கிறார்கள்.. ஜனவரி 9 ரிலீஸ் என்பதால், ஜனநாயகன் படத்தை பற்றின அப்டேட்டை அதுவரை வெளியில் சொல்ல வேண்டாம் என்று விஜய் சொல்லிவிட்டாராம். எனவே, அப்படத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் முழு போர்ஷனும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.. கடைசி நாளில் அவருக்கு ஃபேர்வெல் செய்யலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால், விஜய் அது வேண்டாம் என்று தவிர்த்துவிட்டாராம்.

ஹைலைட் சீன்

எனினும், ஜனநாயகன் படத்தில் விஜய் இதுவரை 69 படத்தில் ஆடின டான்ஸ் கிளிப்களை தொகுத்து, படம் முடியும்போது, தொகுப்பாக வைத்துள்ளனராம்.. "இதுவரை எனக்கு சப்போர்ட் செய்தவர்களுக்கு நன்றி, நான் உங்களிடமிருந்து பிரியாவிடை செய்கிறேன்" என்று விஜய் பேசுவது போல காட்சி உள்ளதாம். இதையெல்லாம் பார்த்தால், ரசிகர்கள் எமோஷனல் ஆகிவிடுவார்கள் என்பதால் இதுகுறித்தும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம்.

நம்பர் 1 ஸ்டாராகவும், அதிக பட்சம் சம்பளம் வாங்கக்கூடிய ஸ்டாராகவும் விஜய் உள்ளார்.. அவர் படம் ரிலீஸ் என்றாலே அதிரிபுதிரி கூட்டம் வந்துவிடும்.. அதிலும் பொங்கல் நேரத்தில் கேட்கவே வேண்டாம்..

அந்தவகையில், பெரிய கலெக்‌ஷனை இந்த ஜனநாயகன் ஈட்டித்தரும் என்றும், நிச்சயம் ரூ.1000 கோடியை தாண்டக்கூடிய படமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த படத்தின் வெற்றி, வரும் தேர்தலுக்கு உதவும் என்று விஜய் நம்புகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+