ரேவதிக்கு 47 வயதில் டெஸ்ட்டியூப் பேபி.. அதுவிடுங்க, புன்னகை மன்னன் படத்துல இப்படி நடந்ததா? செம தில்
சென்னை: மிகவும் தைரியமான பெண் நடிகை ரேவதி.. பத்திரிகையாளர்களிடம் நன்றாக பேசுவார்.. கிசுகிசுக்களை பற்றி கவலைப்பட மாட்டார்.. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டும் அதற்கு விளக்கம் தருவார்" என மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகை ரேவதி பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார்.. அதில், "ஆஷா கேருண்ணி என்பது ரேவதியின் ஒரிஜினல் பெயர்..
மண்வாசனையில் அறிமுகமானவர்.. மக்களோடு மக்களாக இருக்கக்கூடியவர்களை கலைஞர்களாக மாற்றியவர் பாரதிராஜா.. நடிகர் பாண்டியனை அப்படித்தான் தேர்ந்தெடுத்தார்..

மண்வாசனை தேர்வானது எப்படி
கதாநாயகிக்கான தேர்வு நடந்தபோது, ரேவதியின் போட்டோ ஒன்றை பார்த்ததுமே, பாரதிராஜாவுக்கு பிடித்துவிட்டது.. சின்ன டயலாக் ஒன்றை தந்து ரேவதியை பேச சொல்லி உள்ளார் பாதிராஜா. உடனே ரேவதியும் மலையாளம் கலந்த தமிழில் அந்த வசனத்தை பேசியிருக்கிறார்..
ரேவதி பேசிய அந்த மாடுலேஷன், டயலாக் டெலிவரி போன்றவற்றை பார்த்ததுமே பாரதிராஜாவுக்கு பிடித்துவிட்டது.. R சென்ட்டிமென்ட்படி, ஆஷா கேருண்ணி என்ற பெயரை ரேவதி என்று மாற்றினார் பாரதிராஜா..
ஆனால், நடிக்க ரொம்ப பயந்திருக்கிறார் ரேவதி.. "நடிப்பு வரலேன்னா, பாரதிராஜா யூனிட் முன்னிலையிலேயே கைநீட்டி அடித்து விடுவார்" என்று பலரும் ரேவதியிடம் சொல்லியிருக்கிறார்கள். எனவே, முதல்நாளே நடிக்க பயந்துள்ளார்.. இப்படி அடிவாங்கி சினிமாவில் நடிக்கணுமா? பேசாமல் நடிக்காமல் ஒதுங்கிவிடலாமா? என்றும் நினைத்துள்ளார்.. ஆனால், மனோபாலாதான் ரேவதிக்கு தைரியமும், அறிவுரையும் தந்துள்ளார்.. எனினும், ஒருசில காட்சிகளில் திட்டு வாங்கியிருக்கிறார் ரேவதி..
கிளாமர் எனக்கு ஒத்து வராது
மண்வாசனை சூப்பர் டூப்பர் ஹிட்டாகது. ரேவதிக்கு தொடர்ச்சியாக, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என 4 மொழிகளிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. "கிளாமர் எனக்கு ஒத்துவராது, அதனால் அதுபோன்ற டிரஸ்களை தந்துடாதீங்க" என்று ரேவதி முன்கூட்டியே சொல்லிவிடுவார். கடைசிவரை நடிப்புத்திறமையை மட்டுமே நம்பினார்.
புன்னகை மன்னன் படத்தில், ரேகா கேரக்டருக்கு முதலில் நடிக்கவிருந்தது ரேவதிதான்.. ஆனால், கமலுடன் முத்தக்காட்சி என்றதுமே, முடியவே முடியாது என்று ரேவதி மறுத்துவிட்டார்.. டைரக்டர் எவ்வளவோ சொல்லியும், "என்னுடைய ரசிகர்கள் அதனை ஏற்க மாட்டார்கள்" என்று சொல்லி ரேவதி பிடிவாதமாக நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால், அந்த முத்த காட்சி நடித்திருக்கலாம் என்று பின்னாளில் ரேகாவிடம் சொன்னாராம் ரேவதி.. எனினும் ரேவதி கேரியரில் புன்னகை மன்னன் முக்கிய படமாக அமைந்துவிட்டது.
கமலுடன் இணைந்து நடித்த படங்கள்
கமல்கூட நடிக்க முடியாது, டார்ச்சர் செய்வார் என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லவும், கமலுடன் நடிக்க ஆரம்பத்தில் தயங்கியிருக்கிறார்.. ஆனால், புன்னகை மன்னன் படத்தில்,, நடிப்பதற்கு ஏராளமான டிப்ஸ்களை கமல் சொல்லி தந்தார். அதற்குபிறகே கைதியின் டைரி, தேவர் மகன் என பல படங்கள் சேர்ந்து நடித்தார்கள்..
ரேவதிக்கு திருமண வாழ்வில் சிக்கல் எழுந்தது.. இதனால் 2வது திருமணம் செய்ய போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், கிசுகிசுக்களுக்கு முக்கியத்துவம் தராதவர் நடிகை ரேவதி..
5 வருடம் கழித்து மறுப்பு
எனினும், 2வது திருமணத்துக்கு மறுப்பு சொல்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பிறகுதான் குழந்தை தத்தெடுப்பு என்று மற்றொரு செய்தி கசிந்தது.. ஆனால், அது குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார் ரேவதி.
பிறகு 5 வருஷம் கழித்துதான், அது தன்னுடைய டெஸ்ட்டியூப் பேபி என்று சொன்னார்.. "தாய்மை என்ற உணர்வு எனக்கு பிடிக்கும்.. அந்த ஏக்கம் எனக்கு 47 வயசில்தான் தெரியவந்தது, எனக்கான உறவு தேவைப்படுகிறது.. மருத்துவர்களை அணுகினேன், இதற்கான தகுதி எனக்கு இருப்பதாக சொன்னார்கள், அதன்பிறகே குழந்தையை பெற்றுக்கொண்டேன்" என்று வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். மிகவும் தைரியமான பெண் ரேவதி.. பத்திரிகையாளர்களிடம் நன்றாக பேசுவார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications