வாயை பிளக்க வைத்த கரீஷ்மா கபூர் கல்யாணம் நினைவிருக்கா? ரூ.30000 கோடியும் நடிகைக்கா? இப்போ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலம் ஒரு மனிதனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் சேர்க்கும், அந்த இடத்தை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும், அதற்கான சோதனை, வேதனைகளையும் தாங்கி கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இதற்கு உதாரணமாக ஒரு நடிகையின் வாழ்க்கை சம்பவத்தையும் விரிவாகவே தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.. இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியுள்ள செய்யாறு பாலு, "பாலிவுட்டில் கரீஷ்மா கபூரை தெரியாதவர்களே இருக்க முடியாது.. 17 வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட வந்து, இன்று 30 ஆயிரம் கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார்..

Television rs30000 crore asset Karisma Kapoor 30000

கடந்த 2003-ல் சஞ்சய் கபூர் என்ற மிகப்பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து 2வது மனைவியானார்.. அம்பானி, அதானி குடும்பத்தின் திருமணத்தைவிடவும், உலகமே வியக்கும்படி இந்த திருமணம் நடந்தது.. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்..
கணவருடன் சேர்ந்து பலவிதமான பிசினஸ்களை கரீஷ்மாக கபூரும் கவனித்து கொண்டார்..

2 பிள்ளைகள் மீது உயிரையே வைத்திருப்பவர் கரீஷ்மா கபூர்.. பிள்ளைகளுக்காகவே விளம்பர படங்களில் நடிப்பதைகூட தவிர்த்தார்.. நடிப்பே வேண்டாம் , எனக்கு உலகமே என் குழந்தைகள்தான் என்று சொல்லிவிட்டார்..

தம்பதிக்குள் வெடித்த சலசலப்பு

எனினும், பணம், புகழ் அதிகமாக இருக்குமிடத்தில் பிரச்சனைகளும் அதிகமாக இருப்பது போல, தம்பதிக்குள் சலசலப்பு வந்தன.. கணவர் சஞ்சய் கபூர், போலோ விளையாட்டுக்கு அடிமையாகியிருந்தார்.. இதற்காகவே இங்கிலாந்தில் சென்று விளையாடி கொண்டிருப்பார்.. இதனால், குடும்பம், குழந்தைகளை மறந்தார்..

ஒருமுறை குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. டெல்லியிலுள்ள பெரிய மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை நடந்தது.. ஆனால், அப்பா வேண்டும் என்று குழந்தை கேட்கவும், கரீஷ்மா போன் மேல் போன் செய்தார்.. ஆனால் சஞ்சய் கபூர் போன் எடுக்காமல், போலோ விளையாடியிருக்கிறார்.. பிறகு செல்போனில் இருந்த 100 மிஸ்டு கால்களை பார்த்துவிட்டு, கரீஷ்மாவுக்கு போன் செய்தார்.

கதறி அழுத கரீஷ்மா

அப்போது கரீஷ்மா கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.. குழந்தை முக்கியமா? விளையாட்டு முக்கியமா? என்று கேட்டதற்கு, தனக்கு போலோதான் முக்கியம் என்று சஞ்சய் சொல்லிவிட்டார்.. அப்போது முதல் தகராறு வெடித்து, தம்பதிக்குள் பிரிவினை கிளம்பியது.. அப்போது "நீ என்ன சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நடிகைதானே? நான் பிறக்கும்போதே பணக்காரன்" என்ற வார்த்தையையும் விட்டார் சஞ்சய்..

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கரீஷ்மா, விவாகரத்துக்கு சென்றார்.. இழுபறியாக நடந்து இறுதியில் சுப்ரீம்கோர்ட்டில் விவாகரத்து நடந்தது.. திருமணம் போலவே, இந்த விவாகரத்தும் பலரது கவனத்தை அப்போது பெற்றிருந்தது.. ஜீவனாம்சம் 70 கோடி, மும்பையில் ஒரு வீடு, 2 குழந்தைகளுக்கும் படிப்பு செலவுக்கு மாதம் 10 லட்சம் தந்து ஒதுங்கிவிட்டார் சஞ்சய். கரீஷ்மாவும், 2 குழந்தைகளுடன் தனியே பிரிந்து வந்துவிட்டார்.

3வது திருமணம்

இதற்கு பிறகு 30 ஆயிரம் கோடியில் ஒரு பிசினஸ் ஆரம்பித்தார் சஞ்சய்.. பிரியா என்பவரை 3வது திருமணம் செய்து, அவரையும் அந்த கம்பெனியில் களமிறக்கினார்.. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.. ஒருமுறை இங்கிலாந்தில் போலோ விளையாட சென்ற சஞ்சயை, தேனி ஒன்று கடித்துள்ளது.. அந்த தேனி உடலிலேயே சென்றுவிட்டதாகவும் சொன்னார்கள் இறுதியில் மாரடைப்பில் இறந்துவிட்டார் சஞ்சய். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சொன்னார்கள்..

இப்போது, 30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு என்பதுதான் சிக்கலாக எழுந்துள்ளது? பிரியா தன்னுடைய மகனின் பெயரில் ஏகப்பட்ட ஷேர்களை எழுதியிருக்கிறார்..

ஜீவனாம்சம்

ஏற்கனவே விவாகரத்து நடந்து, ஜீவனாம்சமும் பெற்றுவிட்டதால், இந்த சொத்து எதுவுமே கரீஷ்மாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.. எனினும், தந்தை சொத்தில் பங்கு கோரும், வாரிசுக்கு சொத்து உள்ளது என்று மேலும் சிலர் சொல்கிறார்கள். உனக்கென்ன அவ்வளவு பேராசையா? என்று பிரியாவும், கரீஷ்மாவை சாடி வருகிறார். ஆனாலும், சாதகமான முடிவை எதிர்நோக்கியிருக்கிறார் கரீஷ்மா.

காலம் ஒரு மனிதனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் சேர்க்கும், அந்த இடத்தை நாம்தான் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும், அதற்கான சோதனை, வேதனைகளையும் தாங்கி கொள்ளவும் வேண்டும்.. இதைத்தான் கரீஷ்மா சம்பவத்தில் நாம் அறியவேண்டியது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+