பலரையும் அதிர்ச்சி அடைய வைத்த இன்ஸ்டா பிரபலம் ராகுல் மரணம்.. அம்மாவோடு பேசிய கடைசி பேட்டி
சென்னை: பிரபல யூடியூபராகவும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ராகுல் டிக்கி நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இது அவருடைய பாலோவர்ஸை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் அவர் கடைசியாக அவருடைய அம்மாவோடு கலந்து கொண்ட பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாழ்க்கை ரொம்பவும் குறுகியது. அதில் வாழும் வரைக்கும் பலரையும் மகிழ்ச்சியாக வைப்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். சிலர் தங்களை கோமாளியாக சித்தரித்து அடுத்தவர்களை மகிழ்ச்சி செய்து வருகிறார்கள். இவர்களுடைய வீடியோ மற்றும் பேச்சுக்களை பார்க்கும்போது நம்முடைய கவலைகள் கூட கரைந்து ஓடிப்போய் விடும்.

இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பலர் தங்களுடைய திறமைகளை இணையத்தில் பலருக்கும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல சமூக வலைத்தளத்தின் மூலமாக பிரபலமானவர்தான் ராகுல் டிக்கி. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சார்ந்தவர். ராகுல் தந்தை இறந்து போய்விட்ட நிலையில் தன்னுடைய அம்மாவிற்கு ஒரே துணையாக இவர் இருந்து வந்தார்.
டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதன் மூலம் பல வீடியோக்கள் வெளியிட்டு ராகுல் பிரபலமானார். பெண்கள் போல வேடம் போட்டு பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். ட்ரெண்டிங்கில் என்ன போய்க் கொண்டிருக்கிறதோ, அது ரிலேட்டடாக வீடியோக்கள் போட்டு இருந்தார். டிக் டாக் செயலி செயல் இழக்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம், யூடியூபில் அவர் வீடியோக்கள் வீடியோ போட தொடங்கினார்.

சமூக வலைத்தளத்தில் அவரை அதிகமானோர் பாலோ செய்து வந்தனர். சமீபத்தில் தான் ராகுலுக்கு கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுண்டம்பாடி நேரு நகர் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணோடு திருமணம் ஆகி இருந்தது. நேற்று இரவு சுமார் 10. 30 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கவுண்டம்பாடிக்கு சென்று இருக்கிறார்.
அப்போது கவுண்டம்பாடிக்கு செல்லும் நுழைவு பாலத்தில் ராகுல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவருடைய பைக் பாலத்தின் நடுவில் உள்ள செண்டர்மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டு இருக்கிறது.
இந்த விபத்தில் ராகுலின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இந்த செய்தி காலையில் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இதை பலரும் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர் மீண்டும் வந்து இதெல்லாம் பிராங்க் என்று ஒரு வீடியோ போட மாட்டாரா? என்று பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவோடு ஒரு பேட்டியில் ராகுல் டிக்கி கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் எனக்கு அப்பா கிடையாது. எனக்கு சின்ன வயதிலேயே அப்பா இறந்து போய்விட்டார். அம்மாதான் என்னை வளர்த்து வர்றாங்க. அம்மா கஷ்டப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்பா இல்லாதவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும். அப்பாவின் அன்புக்காக நான் ஏங்கி இருக்கிறேன். அவருடைய கதகதப்பு எனக்கு கிடைக்காதா? என்று நினைத்திருக்கிறேன். அப்பாவின் அட்வைஸ் கிடைத்திருந்தால் என்னுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

என் அம்மாவை சிரிக்க வைக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். அம்மாவை எந்த இடத்திலும் தனியாக விடக்கூடாது என்று அம்மா கூடவே தான் நான் இருக்கிறேன். குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக சின்ன சின்னதாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் கிடைக்கும் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ போடுகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா பேசுகையில் எனக்கு ராகுல் தான் எனக்கு எல்லாமே.
என்னுடைய கணவர் இந்த உலகத்தை விட்டு போன பிறகு எனக்குனு இந்த உலகத்தில் இருப்பது ராகுல் மட்டும்தான். அவனுடைய சந்தோசம் தான் எனக்கு பெரியது என்று பேசி இருக்கிறார்கள். அம்மாவும் மகனும் பேசிய வீடியோ இப்போது பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.
ராகுலை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அதுபோல இன்று அவருடைய மரண செய்தியை கேள்விப்பட்டதும் அதிகமான யூடியூபர் மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் அவருக்காக வருத்தம் தெரிவித்து போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனமாக செல்ல வேண்டும். இரவு நேரமாக இருந்தாலும் அதிவேகமாக செல்லக்கூடாது. எந்த இடத்தில் பள்ளம் இருக்கும் என்றும் யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் வாகனங்கள் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி செல்ல வாய்ப்புள்ளது.
அதனால் வேகமாக எந்த இடத்திலும் வண்டியை ஓட்டாதீர்கள். சாலையில் ஒருவர் செய்யும் தவறால் ஒரு குடும்பமே கண்ணீர் சிந்தும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் சரி, நான்கு சக்கர வாகனத்தில் சென்றாலும் சரி சாலையில் கவனமாக செல்வோம் மக்களே.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications