மீண்டும் சீரியலுக்கு வரும் நித்யா ராம்.. கலக்கலாக தொடங்கிய பூஜை.. முதல் நாளே இப்படி ஒரு அமர்க்களமா?
சென்னை: நடிகை நித்யா ராம் அண்ணா என்கிற சீரியல் மூலமாக மீண்டும் சீரியலில் அறிமுகமாகிறார்.
நித்யா ராம் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலமாக பலருக்கும் பரீட்சயமானவர்.
தற்போது மிர்ச்சி சிவாவோடு ஜோடியாக நித்யா ராம் நடிக்கும் அண்ணா சீரியல் பூஜையோடு தொடங்கியது.

ஆர்.ஜே வாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து செந்தில் அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக நடிகராக பிரபலமானார். அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த அவர் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து அந்த சீரியல் கடந்த வருடம் முடிவடைந்தது.

அதற்குப் பிறகு இதுவரைக்கும் சீரியலில் அறிமுகமாகாமல் இருந்த செந்தில் மீண்டும் தற்போது ஜீ தமிழுக்கு "அண்ணா" என்ற சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா ராம் நடிக்கிறார். இந்த தொடருக்காண பூஜை இன்று நடந்து முடிந்து இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வரையிரலாகி வருகின்றன.

நித்யா ராம், 2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார்.நித்யா ராம் குடும்பம் ஒரு கலைஞர் குடும்பம் தான். அவரது தந்தை கே.எஸ் ராமு மற்றும் சகோதரி ரசித்தாராம் ஆகியோர் கிளாசிக்கல் நடன கலைஞர்களாக உள்ளனர். அதற்குப் பிறகு உள்ளவங்க எல்லாம் படங்களையும் தோன்றியிருக்கிறார்கள். நித்யாவும் வேலை அகடமியில் கிளாசிக்கல் நடனத்தை கற்றிருக்கிறார்.
நித்யா ராம் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்கிறார். கொஞ்சகாலம் ஒரு கம்பெனில வேலை பார்த்தார் .ஆனா அவரோட கனவு கதாநாயகிதானாம். சினிமாவில் ஜொலிக்க வைக்கிறது தான் அவரோட கனவாம். அதனால் அவர் பார்த்த வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து விட்டார் . அதன்பிறகுதான் கன்னட தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இவரும் அவரது சகோதரியும் இணைந்து சில நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார்கள். அந்த டைம்ல கன்னடத்திலும் தெலுங்கிலும் பிஸியாக நடித்து இருக்கிறார்.அப்போதான் சன் டிவியிலிருந்து நந்தினி சீரியலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த சீரியல் மிக பிரம்மாண்ட அளவிலான எடுக்கப்பட்டது. சுந்தர் சி இயக்கத்தில் எடுக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்த சீரியலில் நடிகைகள் எல்லாம் புதுமுகமாக இருந்தனர். இதில் நித்தியா நந்தினி ஆக பாம்பு ஆக நடித்து இருப்பார். இந்த சீரியல் திரைப்படத்திற்கு சமமாக பிரிண்டில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதற்கு பிறகு தமிழிலும் நித்தியாராம் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் ஆனது.நித்யாவிற்கு அவரது சிரிப்பு தான் பிளஸ் பாயிண்டு.

அதுக்கு பிறகு உதட்டுக்கு கீழ இருக்கும் மச்சம் .பொதுவாக சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகமாக பார்ப்பார்கள் ஆனால் நந்தினி சீரியல் பொருத்தவரையில் குழந்தைகளும் இளைஞர்களும் இவரை பார்ப்பதற்காகவே காத்துக்கிடந்தனர் .நிறைய ஸ்டேட்டஸ் சாங் கூட நந்தினி நித்யாவை வைத்துதான் பரவி வந்தன.


Click it and Unblock the Notifications
