ஜீ தமிழில் மூன்று சீரியல்களில் அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்.. இனி இவர்களுக்கு பதில் இவர்கள்தான்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் சீரியல், சந்தியா ராகம் சீரியல் மற்றும் கார்த்திகை தீபம் சீரியலில் மூன்று புதிய நடிகர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். ஏற்கனவே நடித்து வந்த நடிகர்கள் விலகி இருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. சீரியல்கள் தொடர்ச்சியாக பல வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் நடிக்க தொடங்கும் பல நடிகர்கள் தொடர்ந்து நடிக்க முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு நடிகர் சீரியலில் இருந்து திடீரென்று விலகியதால் டிஆர்பியில் மாற்றம் ஏற்படும். ஆனாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சில சீரியலில் இருந்து விலகுகிறார்கள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது, இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அதிலும் குறிப்பாக ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம், சந்தியா ராகம், அண்ணா, வள்ளியின் வேலன் போன்ற சீரியல்கள் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில் அடுத்தடுத்து 3 ஜீ தமிழ் சீரியல்களில் 3 நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். வள்ளியின் வேலன் சீரியலில் வள்ளியின் அப்பாவாக சாக்ஷி சிவா ரத்தினவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சில காரணங்களால் இவர் சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பாம்பே ஸ்ரீதர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அதே போல் சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நவீன் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக புதிய கார்த்தியாக அஸ்வின் கண்ணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் கார்த்திகை தீபம் சீரியல் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய நாயகியாக வைஷ்ணவி என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications