பொங்கலுக்கு முன்னரே தொடங்கும் மெகா கொண்டாட்டம்.. ஜீ தமிழின் "பொங்கல்" சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாக விளங்கி வருகிறது, மக்கள் எதிர்பார்க்கும் வகையில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள், முற்றிலும் மாறுபட்ட தரமான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.
அதே போல் பண்டிகை தினங்களில் மக்களை மகிழ்விப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அப்படி தான் இந்த பொங்கலை கொண்டாட்டங்கள் நிறைந்த ஒன்றாக மாற்ற உள்ளது ஜீ தமிழ். வரும் ஜனவரி 12-ம் தேதி முதலே ஜீ தமிழ் பொங்கலை வரவேற்க தயாராகி விட்டது.

அதன்படி எந்தெந்த தினத்தில் எந்தெந்த நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஜனவரி 12-ம் தேதி மாலை 6:30: வரும் ஜனவரி 12-ம் தேதி மாலை 6:30 மணிக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி 2024-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்ற Greatest Of All Time ( GOAT ) திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. தளபதி விஜயின் டபுள் ஆக்சன் திரைப்படமான கோட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தை பொங்கல்: அடுத்ததாக தை பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் மோகன சுந்தரம், சாந்தா மணி, பர்வீன் சுல்தானா என பலர் பங்குபெற மக்களுக்கு அதிக மகிழ்ச்சி தருவது நகர உணவா? கிராமத்து உணவா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
விஷால் திரைப்படம்: தொடர்ச்சியாக காலை 10.30 மணிக்கு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படமான ரத்னம் ஒளிபரப்பாக உள்ளது.

சரிகமப போட்டி: அதன் பிறகு மதியம் 1:30 மணிக்கு ஜீ தமிழ் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் குழுவினருடன் பொங்கல் சிறப்பு சரிகமப போட்டி ஒளிபரப்பாக உள்ளது. மக்களை மகிழ்விக்கும் மிகப்பெரிய இசை விருந்தாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜெயம் ரவி திரைப்படம்: அடுத்து மதியம் 3:30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பிரதர் திரைப்படம் மீண்டும் உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. அக்கா தம்பி பாசத்தை கொண்டாடும் இந்த திரைப்படம் உங்களையும் உணர்வுபூர்வமாக உருவ வைக்க உள்ளது.
விஜயின் கோட் திரைப்படம்: பிரதர் திரைப்படத்தை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு தளபதி விஜயின் கோட் திரைப்படம் மீண்டும் உங்களை கொண்டாட வைக்க உள்ளது. ஆமாம் பொங்கலுக்கு முன்னரே ஒளிபரப்பான கோட் திரைப்படம் மீண்டும் ஜனவரி 14-ம் தேதியும் ஒளிபரப்பாக உள்ளது.
சிறப்பு பட்டிமன்றம்: கோட் படத்துடன் தை பொங்கல் நிறைவு பெற மாட்டு பொங்கலான ஜனவரி 15-ம் தேதி காலை 9 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் உறவுகள் வருகை இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
ஆச்சார்யா திரைப்படம்: தொடர்ந்து காலை 10:30 மணிக்கு கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், சோனு சூட், பூஜா ஹெக்டே என பலர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஆச்சார்யா திரைப்படம் உங்களை மகிழ்விக்க வருகிறது.
தமிழா தமிழா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி: அடுத்ததாக மதியம் 1:30 மணிக்கு ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், மதுரை என தமிழகத்தின் முக்கியமான 6 மாவட்டங்களை சேர்ந்த பிரபலங்களும் மக்களும் இந்த சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அன்று முதல் இன்று வரை மண்வாசனை மாறாமல் இருப்பது எங்க ஊர் தான் என 6 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் விவாதம் செய்ய உள்ளனர்.

மாட்டுபொங்கல்: மாட்டுபொங்கலின் நிறைவு பகுதியாக மதியம் 3:30 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அர்ச்சனா என பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திகில் திரில்லர் திரைப்படமான டிமான்டி காலனி 2 ஒளிபரப்பாக உள்ளது.
எனவே ஜனவரி 12-முதல் 15 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் இந்த பொங்கலை கொண்டாட தயாராகுங்கள். கோட் படத்தை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளையும் வெல்லுங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications