எடப்பாடி 2.0: 'லைட்வெயிட்' டூ 'ஹெவிவெயிட்'.. 2026 கோட்டையை பிடிக்க எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இவரால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?" என 2017-ல் கூவத்தூரில் கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு, இன்று ஒற்றைத் தலைமையாக விஸ்வரூபம் எடுத்து பதிலடி கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அசுர வளர்ச்சியுடன் வலம் வரும் இபிஎஸ்-ஸின் வியூகங்கள் அரசியல் அரங்கையே அதிரவைக்கின்றன.

உட்கட்சி மோதல் டூ ஒற்றைத் தலைமை!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், தினகரன் என பல முனைகளில் சிதறிக் கிடந்த அதிமுகவை, மிக நிதானமாகக் காய்களை நகர்த்தி ஒன்றிணைத்தார் எடப்பாடியார்! ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும், எடப்பாடியின் தலைமைத்துவமே இறுதியானது என தீர்ப்பு வந்தது.. இன்று கட்சிக்குள் எந்த அதிருப்திக் குரலும் இன்றி, அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 'ஒற்றைத் தலைமை'யாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

EPS 2 0 Edappadi Palaniswami s Strategic Masterplan with AIADMK for 2026 Tamil Nadu Elections

கூட்டணி வியூகமும் சாணக்கியத்தனமும்!

2024-ல் தனித்து நின்ற அதிமுக, 2026-ல் பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது.. "நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை" என முழங்கிய எடப்பாடி, தொகுதிப் பங்கீட்டில் காட்டிய உறுதி அரசியல் விமர்சகர்களையே ஆச்சரியப்பட வைத்தது.. பாஜக அதிக இடங்கள் கேட்டபோதும், 27 இடங்களை மட்டுமே ஒதுக்கிவிட்டு, அதிமுக 178 இடங்களில் நேரடியாகக் களமிறங்குவது தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மறக்காத நல்லாட்சி!

தனது 2017-2021 ஆட்சிக் காலத் திட்டங்களை முன்வைத்தே எடப்பாடியார் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்:

  • விவசாயிகளின் விடிவெள்ளி: 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தது மற்றும் 'குடிமராமத்து' திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களை மீட்டது.
  • மாணவர் நலனில் புரட்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அதிரடி முடிவு!
  • மகளிர் மேம்பாடு: தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி மற்றும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம்!
  • நெருக்கடி மேலாண்மை: கொரோனா காலத்தில் 2.1 கோடி குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கியது மற்றும் 2,000 அம்மா மினி கிளினிக்குகளைத் தொடங்கியது!

2026-ன் லட்சியம்!

71 வயதான எடப்பாடியார், ஒரு இளைஞரைப் போல 234 தொகுதிகளிலும் சாலை மார்க்கமாக சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.. "போதைப்பொருள் இல்லாத தமிழகம்" மற்றும் "திமுக-வின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி" என்பதே இவரது பிரதான முழக்கமாக இருக்கிறது.

"அவர் ஒரு விவசாயி, சுலபமாகக் கையாண்டுவிடலாம்" என நினைத்தவர்களுக்குத் தனது ராஜதந்திரத்தால் பதிலடி கொடுத்து வருகிறார் எடப்பாடியார்.. 2021-ல் 66 இடங்களை வென்றவர், இப்போது 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளார்.. 2026 தேர்தல் களம் இவருக்கு ஒரு 'அக்னிப் பரீட்சை' மட்டுமல்ல, அவர் ஒரு "புரட்சித் தமிழர்" என நிலைநாட்டக் கிடைத்த அரிய வாய்ப்பு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+