குக்கரில் கொதித்த "மனித கறி".. குழம்பில் மிதந்த "எலும்புகள்".. அலறி ஓடிய மோப்பநாய்.. அய்யோ கொடுமை..!
காணாமல் போன 28 பெண்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் காணாமல் போயிருக்கும் 26 பெண்களின் கதி என்ன ஆனது என்ற கலக்கம் கேரளாவை சூழ்ந்துள்ளது... இதையடுத்து போலீசாரின் விசாரணையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஷாபி... இவர் ஒரு போலி மந்திரவாதி.. தன்னுடைய மனைவியின் செல்போனில் இருந்து சோஷியல் மீடியாவில் ஸ்ரீதேவி என்கிற பெயரில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி உள்ளார்..
அதன் மூலமாக, டாக்டர் பகவல்சிங் என்பவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது... டாக்டர் பகவல்சிங்கும் அவரது மனைவி லைலாவும் போலி மந்திரவாதி ஷாபியின் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

மந்திரவாதி
மந்திரவாதியிடம் 2 பேரும் தங்கள் ஆசையை அடுக்கினார்கள்.. காலத்துக்கும் இளமையாகவே இருக்க வேண்டும், முதிய தோற்றம் வந்துவிடக்கூடாது, எப்போதுமே பணத்தில் திளைத்திருக்க வேண்டும், எவ்வளவு செலவு செய்தாலும், தங்களிடம் உள்ள பணம் வற்றாமல் இருக்க வேண்டும் என்று ஆசைகளை சொல்லி உள்ளனர்.. இதைக் கேட்டதும், மந்திரவாதி, இந்த ஆசைகளையெல்லாம் அசால்ட்டாக செய்துவிடலாம் என்றும், நரபலி கொடுத்தால் இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் என்றும் சொல்லி நம்ப வைத்திருக்கிறார்..

ஜூஜூபி
அவர்களும் இதற்கு ஓகே சொல்லி உள்ளனர்.. நரபலிக்காகவே ஆட்களை பிடிக்க ஆரம்பித்தனர்.. கடந்த ஜுன் மாதம் 8ம் தேதி எர்ணாகுளத்தில் காலடி பகுதியில் லாட்டரி விற்று வந்த ரோஸ்லின் என்ற அப்பாவி பெண் சிக்கினார்.. அவரிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்று நரபலி கொடுத்திருக்கிறார்கள்.. பிறகு, கடந்த மாதம் 26ம் தேதி, எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு விட்டு வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா என்கிற பெண்ணையும் ஏமாற்றி அழைத்து சென்று நரபலி தந்திருக்கிறார்கள்..

குக்கர்
பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டியிருக்கிறார்கள்... அதுமட்டுமல்ல, உடலின் சில பாகங்களை குக்கரில் வேகவைத்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்... இந்த நரபலி சம்பவத்தை கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவே ஆடிப்போய் உள்ளது.. இந்த வழக்கில் ஷாபி, பகவல் சிங் , லைலா உள்ளிட்ட 3 பேர் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.. இவர்கள் அனைவருமே போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.. அதன்படி, பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்..

கூறுகெட்ட குக்கர்
அப்போதுதான், அவர்களுடன் வந்த மோப்பநாய், அந்த வீட்டின் பின்பக்கமாக ஓடி, உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் வந்துநின்று கொண்டது.. இதற்கு பிறகுதான், நரபலியும், உடலின் பாகங்களை குக்கரில் சமைத்ததும் தெரியவந்துள்ளது.. இதைதவிர, பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி இருந்ததாம்.. அவைகளில் பெரும்பாலும், எலும்பு துண்டுகள் இருந்துள்ளன.. மனித கறியை குக்கரில் வேகவைத்து 3 பேரும் சாப்பிட்டுள்ளனர். மீதியான அந்த குழம்பு பிரிட்ஜில் இருந்ததாம். உடல்பாகங்கள் மிதந்து கொண்டிருந்ததாம். குழம்புக்கு போக மீதி உடல்பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர்.

பீஸ் பீஸ் எலும்புகள்
மனித மாமிசத்தை வேகவைத்து சாப்பிட்ட குக்கர், உடல்களை வெட்ட பயன்படுத்திய கத்திகள், பெண்களின் வாயை ஒட்டுவதற்காக பயன்படுத்திய பிளாஸ்டர் உள்பட பொருட்களை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர்.. அனைவருமே இதே பகுதியை சேர்ந்தவர்கள்.. எர்ணாகுளம் மாவட்டத்தில் 14 பெண்களும், பத்தனம் திட்டா மாவட்டத்தில் 12 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்... இவர்கள் அனைவருமே கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்களா? அல்லது வேலைதேடி வந்தவர்களா என்று தெரியவில்லை.

மனித கறி
ஆனால், இவர்கள் அனைவருமே ஒரே காலகட்டத்தில் தொலைந்து போயிருக்கிறார்கள்.. ஒருவேளை அவர்களும் நரபலிக்கு ஆளாகியிருப்பார்களா? அல்லது காணாமல் போயிருப்பார்களா? அப்படி காணாமல் போயிருந்தால், இதுவரை ஏன் புகார்கள் வந்து சேரவில்லை? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளது. இதனால், கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரள மாநிலமே நடுநடுங்கி போயிருக்கிறது.. அதிலும் பெண்கள் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாநிலம், கேரளாதான் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது!!
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications