திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நிலச்சரிவு, அதீத மழை, விமான விபத்து, கொரோனா ஆகியவற்றால் கேரளாவில் இதுவரை 47 பேர் பலியாகிவிட்டனர். இதனால் கேரளாவில் கருப்பு வெள்ளியாக கருதப்படுகிறது.

Recommended Video

    மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதுவரை இது போன்ற மோசமான வெள்ளிக்கிழமையை கேரளா சந்தித்ததே இல்லை. இந்த மாநிலத்தில் கொரோனாவை எதிர்த்து திறம்பட போராடி வருகிறது.

    இவர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உலகளவில் பேசப்படுகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெறும் 16 மணி நேரத்தில் இதுவரை நிலச்சரிவு மற்றும் விமான விபத்தில் 47 பேர் பலியாகிவிட்டனர்.

    கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்கிய போது நொறுங்கி விபத்து.. 18 பேர் பலி.. 123 பேர் காயம் கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்கிய போது நொறுங்கி விபத்து.. 18 பேர் பலி.. 123 பேர் காயம்

    18 பேர் பலி

    18 பேர் பலி

    முதல் சம்பவம் மூணாறு நிலச்சரிவாகும். நேற்று அதிகாலை இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 80 பேர் தங்கியிருந்தனர். இந்த இடம் மூணாறிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் நேற்று நள்ளிரவு வரை 18 உடல்கள் கைப்பற்றப்பட்டன.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதன் மூலம் 7 பேர் பலியாகிவிட்டனர். 6 பேர் காயமடைந்தனர். 12 வீடுகள் நாசமாகியுள்ளனர். 735 வீடுகள் ஒரு பகுதி சேதமடைந்துள்ளன. சனிக்கிழமையான இன்று அதிக அளவு மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    35 அடி ஆழம்

    35 அடி ஆழம்

    இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணிக்கு கோழிக்கோட்டில் கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஒரு விமானம் தரையிறங்கியது. அப்போது அதிக மழை காரணமாக சறுக்கி விழுந்த விமானம் 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

    47 பேர் மரணம்

    47 பேர் மரணம்

    இதனால் விமானம் இரண்டாக உடைந்துவிட்டது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். இது மாநிலத்தின் முதல் முக்கிய விமான விபத்தாகும். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 பேர் மரணமடைந்துவிட்டார்கள். இதன் மூலம் நிலச்சரிவு, மழை, விமான விபத்து, கொரோனா பாதிப்பு ஆகிய காரணங்களால் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

    English summary
    So far 47 deaths due to rain, Munnar landslides, and Flight accident in Kozhikode leads Kerala as Black Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X