கேரளாவில் சீக்ரெட் மீட்.. சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட்.. துப்பு துலக்கிய என்ஐஏ: பின்னணி
திருவனந்தபுரம்: கேரளாவில் ரகசிய மீட்டிங் நடத்தியதாகவும், பல்வேறு தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட் உட்பட 19 பேர் மீது என்ஐஏ அமைப்பு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
கேரளாவிலும் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து உள்ளதாக என்ஐஏ ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. மாவோயிஸ்ட் போராளிகள் அதிக அளவில் இங்கு நடமாடுவதாகவும், பல்வேறு கூட்டங்களை அடிக்கடி நடத்துவதாகவும் என்ஐஏ தெரிவித்து இருந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 3 வருடங்களில் அவ்வப்போது இங்கே ரெய்டுகளையும், கைது நடவடிக்கைகளையும் என்ஐஏ எடுத்து வந்தது. பீகார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் அளவிற்கு இங்கு மாவோயிஸ்ட் படையினர் இல்லை என்றாலும் கேரளாவிலும், கேரளா எல்லையோர தமிழ்நாட்டிலும், ராமநாதபுரம் உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில வருடங்களாக மாவோயிஸ்ட், நக்சலைட் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

சோதனை
இதனால் எல்லையோர பகுதிகளில் தமிழ்நாடு போலீசாரும், என்ஐஏ அமைப்பினரும் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது கேரளாவில் ரகசிய மீட்டிங் நடத்தியதாகவும், பல்வேறு தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாகவும் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாவோயிஸ்ட் உட்பட 19 பேர் மீது என்ஐஏ அமைப்பு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

எப்ஐஆர்
அதன்படி ராமநாதபுரத்தை சேர்ந்த காளிதாஸ், கோவையை சேர்ந்த டேனிஷ் என்கிற கிருஷ்ணா, தேனியை சேர்ந்த வேல்முருகன், கோவையை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் மணிவாசகம், குப்புராஜ், அஜிதா மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 19 பேர் மீது எப்ஐஆர் பதியப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா
மீதம் உள்ள 9 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 19 பேரும் கேரளாவில் கடந்த 2016 செப்டம்பர் 23 முதல் 30ம் தேதி வரை நிலம்பூர் காட்டுப்பகுதியில் கூட்டம் நடத்தி உள்ளனர். அங்கு உள்ள முண்டக்கடவு என்ற பகுதியில் இவர்கள் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். மாவோயிஸ்ட் இயக்கம் குறித்தும், கொள்கைகள் குறித்தும், நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் இவர்கள் பேசி உள்ளனர். இளைஞர்களை குழுவில் இணைப்பது பற்றியும் இது தொடர்பாக பயிற்சி வகுப்புகள் குறித்தும் ஆலோசித்து உள்ளனர்.

தாக்குதல்
அதேபோல் பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தாக்குதல்களுக்கு திட்டமிட்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், அரசின் பல்வேறு நிறுவனங்கள், கட்டிடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் பயங்கர ஆயுத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்ததாக இந்த எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ல் மீட்டிங் நடந்த போதிலும் இவர்களின் அடையாளம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

என்ஐஏ
என்ஐஏ விசாரணையில் எல்லோரின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களின் மீது ஐபிசி 121, 122, மற்றும் பிரிவு 18எ, 20 மற்றும் சட்ட விரோதமாக கூடுதல் பிரிவு 38, ஆயுதங்களை வைத்து இருத்தல் பிரிவு 3 ஆகிய பிரிவுகளின் இவர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications