திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேங்க் பேலன்ஸ் 2,00,850.. முதல்வர் நிவாரணத்திற்கு 2 லட்சம்.. பேலன்ஸ் 850தான்.. "ஹீரோவான" ஜனார்த்தன்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ணனூரில் பீடி தொழிலாளி ஒருவர் தடுப்பூசிகளை வாங்க தன்னிடம் இருந்த சேமிப்பு பணமான ரூ 2 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் இவர் கேரளா முழுவதும் பேசப்பட்டு வருகிறார்.

கண்ணனூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் ஒரு பீடி தொழிலாளி. இவரது மனைவி ரஜனி. இவரும் பீடி தொழிலாளி. கடந்த 35 ஆண்டுகளாக இருவரும் பீடி தொழிலாளியாக உள்ளனர்.

கடந்த ஆண்டு ரஜனிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவர் கண்ணனூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது மூளையில் கட்டி ஏற்பட்டதாகவும் அவர் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா 2ஆம் அலை அதிக பாதிப்பு ஏன்? ரெம்டெசிவிர் உடலில் என்ன செய்யும்? மருத்துவர் பூபதி ஜான் விளக்கம்கொரோனா 2ஆம் அலை அதிக பாதிப்பு ஏன்? ரெம்டெசிவிர் உடலில் என்ன செய்யும்? மருத்துவர் பூபதி ஜான் விளக்கம்

36 ஆவது ஆண்டு திருமண நாள்

36 ஆவது ஆண்டு திருமண நாள்

இதனால் ஜனார்த்தன் இடிந்து போய்விட்டார். இவர்களது 36 ஆவது திருமண நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் ரஜனி இறந்துவிட்டார். இதையடுத்து மனைவியின் நினைவாக இருந்து வந்த நிலையில் கேரளாவில் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக போடுவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். பல கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிந்தும் முதல்வர் அறிவித்தார்.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

மேலும் முதல்வரின் கருத்தை மத்திய அமைச்சர் வி முரளிதரன் எதிர்த்தார். இதனால் நான் கோபமடைந்தார். இரவு முழுவதும் ஜனார்த்தனுக்கு தூக்கமில்லை. பின்னர் வங்கியில் எனது கணக்கில் 2 லட்சத்து 850 ரூபாய் இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே காலையில் எழுந்து கூட்டுறவு வங்கிக்கு சென்று ரூ 2 லட்சம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு காசோலையாக கேட்டார்.

மேலாளர்

மேலாளர்

பின்னர் ஜனார்த்தனை தனியாக அழைத்த மேலாளர் ரூ 1 லட்சம் மட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என பேசியுள்ளார். மேலாளர், அவ்வாறு சொன்னதற்கான காரணம் அந்த 2 லட்சம் பணமானது ஜனார்த்தனின் சேமிப்பு மட்டுமல்ல, பீடி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற போது கிடைத்த பிஎஃப், மனைவியின் சேமிப்பு ஆகியவை ஆகும்.

முதல்வர்

முதல்வர்

ஆனால் அதை ஜனார்த்தன் மறுத்துவிட்டு தன்னால் நேற்று முழுவதும் உறங்க முடியவில்லை என்பதால் ரூ 2 லட்சத்திற்கான காசோலையை கேட்டார். அந்த காசோலையை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் வெள்ளிக்கிழமை காலை முதல்வர் நிவாரண நிதி வழங்கினேன் உடனே திங்கள்கிழமை காலை என் வீட்டு முன் ஒரு கார் நின்றது. அதிலிருந்து நிறைய பேர் மைக்குகள், கேமராவுடன் இறங்கினர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முதலில் அவர்களை பார்த்ததும் கோபம் வந்தது. பின்னர் அவர்களது ஆரவாரத்தை பார்த்ததும் எனது கோபம் குறைந்தது என்றார். இந்த உதவி செய்த பிறகு 14 முதல் 15 மணி நேரம் வரை அமைதியாக தூங்கியதாக ஜனார்த்தன் தெரிவித்தார். இவரை ஒட்டுமொத்த கேரள மக்களும் பாராட்டி வருகிறார்கள்.

English summary
A Beedi Worker gives Rs 2 lakh to CM's relief fund for buying Vaccines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X