அய்யோ! பார்த்து பார்த்து கட்டிய வீடு.. ஒரு நொடியில் தரைமட்டம்.. வைரலாகும் காசர்கோடு சோகம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் காசர்கோடில் டவ் தே புயலால் இரண்டு மாடி கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தென் கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று காலை புயலாக மாறியது. இது கர்நாடகா கடற்கரையில் மையம் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இந்த புயலானது நாளை மறுநாள் குஜராத்தில் போர்பந்தர்- நலியா இடையே கரையை கடக்கும். நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள்ளாக இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா
இந்த புயலால் கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
கிராமங்கள்
கேரளா மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் கொட்டி வரும் கனமழையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் கடற்கரை கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் காசர்கோட்டில் கடற்கரையோரத்தில் உள்ள ஒரு வீடு இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

இரு மாடிகள்
காசர்கோட்டில் இரண்டு மாடிகள் கொண்ட அந்த வீடு கடற்கரை நீரால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதே போல் பல வீடுகள் மூழ்கியுள்ளன. இதையடுத்து கடற்கரை கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

புயல்
ஏற்கெனவே கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் அவதியடைந்து வரும் நிலையில் இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்துவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications