கேரள லாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு பெற்ற இளைஞர் திடீர் மரணம்.. மதுவிருந்து வைத்த போது விபரீதம்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு பெற்ற இளைஞர் , நண்பர்களுக்கு மது விருந்து அளித்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் பாங்கோடு பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் சஜீவ் என்பவருக்கு கடந்த மாதம் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசான ரூ.80 லட்சம் விழுந்தது. இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வங்கி கணக்கில் வரிகள் கழிந்தது போக மீதமுள்ள பரிசுத்தொகை வரவு வைக்கப்பட்டது.

இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த சஜீவ்விடம் அவரது நண்பர்கள் பார்ட்டி வைக்க கூறியிருக்கிறார்கள். இதையடுத்து தனது நண்பர்களுக்கு மது விருந்து அளிக்க சஜீவ் முடிவு செய்திருக்கிறார். அதன்படி கடந்த 1-ந்தேதி இரவு நண்பர்கள் அனைவரும் பாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் பிள்ளை என்பவரது வாடகை வீட்டில் கூடியிருக்கிறார்கள்.
பின்னர், சஜீவ் நண்பர்களுடன் உற்சாகத்துடன் மது குடித்தார். விருந்தை முடித்து விட்டு நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால், சஜீவ் மட்டும் மதுபோதை மயக்கத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் சஜீவின் சகோதரி அவரை தேடி சென்ற போது அவர் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சஜீவ் பரிதாபமாக உயிரிழந்தார். சஜீவ் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அதிகப்படியான மது காரணமா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பாங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜீவின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications