கேரளா வயநாடு நிலச்சரிவு: 600-க்கும் மேற்பட்ட அஸ்ஸாம், மே.வங்க தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கதி?
வயநாடு: கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களின் கதியை நினைத்து பார்க்கவே பேரச்சமாக உள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி 70 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் முண்டகக்கை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கதி என்னவானது? என தெரியவில்லை என்கின்றன அதிர்ச்சி தகவல்கள்.
கேரளாவின் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை ருத்ரதாண்டவமாடியது. கடந்த ஒரு மாதமாக இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது பருவமழை. இதனால் வயநாடு மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் தொடர்ந்து ஆக்ரோஷமாக பாய்ந்தோடிக் கொண்டே இருந்தது.

இதனால் நேற்று முதலே வயநாடு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட தொடங்கின. ஒரு பக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொடங்கிய நேரத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 மணிநேரத்தில் 3 பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு வயநாடு மலைக் கிராமங்களையே காவு வாங்கிவிட்டது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்போதைய நிலையில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
குறிப்பாக முண்டகக்கை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 200க்கும் அதிகமான அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இவர்களது குடியிருப்புகள் உள்ளிட்டவை நிலச்சரிவில் சிக்கி இருக்கின்றன. இந்த குடியிருப்புகளுக்கான அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹாரிசான்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் பெனில் ஜான் கூறுகையில், எங்களது எஸ்டேட்டின் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்கிறார். அதே நேரத்தில் நிலச்சரிவில் சிக்கி மீண்டவர்களோ, வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள் பல ஒரு சேர நிலச்சரிவில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் 600-க்கு மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள் கதி என்ன என்பது பெரும் கவலைக்குரியதாகி இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications