வேதனையான பிறந்தநாள் இது.. சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் - பாலியல் புகார் குறித்து நடிகர் ஜெயசூர்யா
திருவனந்தபுரம்: நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொய் உண்மையைவிட வேகமாகப் பயணிக்கும். ஆனால், உண்மைதான் ஜெயிக்கும். இந்தப் பாலியல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று நடிகர் ஜெயசூர்யா தனது பிறந்தநாளில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மலையாள நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது. இந்நிலையில், இந்தக் குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகியது. இந்த அறிக்கை மூலமாக கேரள திரையுலகில் பெண் கலைஞருக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதில், பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சிக்கியுள்ளனர். பாலியல் சர்ச்சையால் மலையாள திரையுலகமே அரண்டு போயுள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் அளித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. நடிகர் ஜெயசூர்யாவுக்கு இன்று பிறந்த நாள். இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்முறையாக மறுப்புத் தெரிவித்து பிறந்தநாளான இன்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய நிலைப்பாடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நடிகர் ஜெயசூர்யாவின் அறிக்கையில் கூறியுள்ளதாவது: "என் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது வழக்கறிஞர் குழுவினர் வழக்கு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளனர். மனசாட்சி இல்லாதவர்களுக்கு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவது என்பது மிகவும் எளிமையான விஷயம்.
ஆனால், தவறான பொய் குற்றச்சாட்டைக் கூறுவது மிகவும் வலிதரக் கூடிய விஷயமாகும். உண்மையைவிட பொய் வேகமாகப் பயணிக்கும். ஆனால், இறுதியில் உண்மைதான் எப்போதுமே ஜெயிக்கும். என் மீது எந்த குற்றமும் இல்லை, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். அதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நம்முடைய நீதித் துறையின் மீது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய இந்தப் பிறந்த நாளை வேதனைமிக்க பிறந்த நாளாக மாற்ற உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, இயக்குநர் ரஞ்சித் மீது நடிகை ஒருவர் ஏற்கனவே பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித் தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது ஆண் நடிகர் ஒருவரும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, இளைஞர் விசாரணைக் குழுவிடம் கூறியுள்ளதாவது: பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டில் வருமாறு ரஞ்சித் கூறியிருந்தார். இதையடுத்து, அங்கு சென்றபோது என்னை மது அருந்துவதற்கு வற்புறுத்தினார். பின்னர், ஆடைகளைக் கழட்ட சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மேலும், நிர்வாணமாக எடுத்த எனது புகைப்படங்களை ரஞ்சித் தனது தோழியும், நடிகையுமான ஒரு பெண்ணுக்கு அனுப்பியுள்ளதாக ரஞ்சித் தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல, மலையாள திரையுலகைச் சேர்ந்த எடவேல பாபு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரையும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்துள்ளது. தொடர் புகார்கள் காரணமாக மலையாள திரையுலகமே தற்போது ஆட்டம் கண்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications