புகாரை வாபஸ் வாங்காட்டி நீ உயிரோட இருக்க மாட்டே.. பிரபல நடிகைக்கு நடிகர் விஜய் பாபு மிரட்டல்
திருவனந்தபுரம்: தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் வாங்குமாறு நடிகைக்கு விஜய் பாபு மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய் பாபு, இவர் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் விஜய் பாபுவின் தயாரிப்பில் வெளியான படம் ஒன்றில் நடித்த நடிகையை தனது வீட்டிற்கு வரவழைத்த விஜய் பாபு, மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

பாலியல் வன்கொடுமை
தன்னை மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதாகவும் அந்த நடிகை புகார் அளித்திருந்தார். மேலும் ஒரு லைவ் நிகழ்ச்சியில் விஜய் பாபு, புகார் கொடுத்த நடிகையின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இது சட்டவிரோதமானது. பாலியல் வன்கொடுமைகளில் சிக்கும் பெண்கள், சிறுமிகளின் அடையாளங்களை வெளியிட கூடாது என்பது சட்டம்.

விஜய் பாபு
ஆனால் விஜய் பாபு அதையும் மீறி அந்த நடிகையின் பெயரை வெளியிட்டுவிட்டார். மேலும் விஜய் பாபு மீது மற்றொரு நடிகையும் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் அந்த நடிகையிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரே ஒரு முத்தம் கொடுக்குமாறு கெஞ்சினாராம். இவர் இப்படியோ சமாளித்து பின்னோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அந்த நடிகை புகார் அளித்துள்ளார்.

விஜய் பாபு எங்கே
இந்த நிலையில் விஜய் பாபு எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் என்பதால் ரெட் கார்னர் நோட்டீஸ் விநியோகிக்கவும் காவல் துறை முடிவு செய்துள்ளது. விஜய் பாபு தன்னிடம் வரும் இளம்பெண்களை மூளைச் சலவை செய்து அவர்களை தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருக்க அனுப்பிவிட்டு பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டுவாராம்.

மிரட்டல்
தனது படத்திற்கு பணத்தை கொடுக்குமாறு தொழிலதிபர்களிடம் மிரட்டி ஏராளமான கருப்புப் பணத்தை சினிமா தயாரிக்க பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள விஜய் பாபுவை கைது செய்ய கேரள போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தன் மீதான புகாரை வாபஸ் வாங்குமாறு நடிகைக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் மூலம் விஜய் பாபு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications