ஒரே ஒரு போட்டோ.. மெஸ்ஸிக்கே சவால் விட்ட சசிதரூர்.. உலககோப்பை கால்பந்து போட்டிக்கு நடுவே கலகல

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: உலககோப்பை கால்பந்து போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரே ஒரு போட்டோ போட்டு அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கே காங்கிரஸ் எம்பி சசிதரூர் சவால் விடுத்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்தாரில் 22வது உலககோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 20ம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. உலககோப்பை கால்பந்து போட்டி ஏறக்குறைய ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் கால்பந்து ஜூரம்

இந்தியாவில் கால்பந்து ஜூரம்

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் இருந்தாலும் கூட கால்பந்துக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் தமிழகத்திலும் கால்பந்து போட்டியை ஏராளமானவர்கள் ரசித்து வருகின்றனர். இதனால் கால்பந்து ஜூரம் இந்தியாவிலும் பரவி உள்ளது என்றால் மிகையல்ல.

சுவாரசியமான போட்டிகள்

சுவாரசியமான போட்டிகள்

உலககோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்ததுபோலவே இந்த உலககோப்பை கால்பந்து போட்டியிலும் நடந்து வருகிறது. அதன்படி கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி வீழ்த்தியது. இதேபோல் மேலும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றனர். அனைத்து அணிகளும் திறமையை நிரூபித்து வெற்றி பெறும் முனைப்பில் போராடி வருவதால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

டிரெண்டாகும் மீம்கள்

டிரெண்டாகும் மீம்கள்

இதற்கிடையே தான் கால்பந்து போட்டி தொடர்பாக இணையதளங்களில் மீம்கள் பரவி வருகின்றன. முக்கிய போட்டிகளில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் சிரிப்பை வரவைக்கம் வகையில் அமைந்துள்ளன. அதேவேளையில் வாழ்க்கை தத்துவத்தை கூறும் வகையிலும் சில மீம்கள் வெளியாகி சிந்திக்க வைக்கவும் தவறுவது இல்லை

போட்டோ வெளியிட்ட சசிதரூர்

போட்டோ வெளியிட்ட சசிதரூர்

இந்நிலையில் தான் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்து வேடிக்கையாக பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தனது தலையில் பந்தை வைத்து சாகசம் செய்யும் வேளையில் இந்திய பெண் ஒருவர் தனது தலையில் 5 மண்பாண்டங்களையும், 2 கைகளிலும் தலா 2 மண்பாண்டங்களையும் தூக்கிச்செல்லும் வகையில் உள்ளன.

மெஸ்சிக்கு சவால்

மெஸ்சிக்கு சவால்

இந்த படத்தை ஒப்பிட்ட சசிதரூர் எம்பி ‛‛மெஸ்சி(அர்ஜென்டினா) பெரிய ஆட்டக்காரராக இருக்கலாம். ஆனால் எங்க இந்திய பெண் மவுசி போல் இதை செய்யமுடியுமா?'' என கேள்வி எழுப்பியுள்ளார். சசிதரூர் இயல்பாகவே ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். வேடிக்கையாக பல்வேறு பதிவுகளை செய்து வருவார். இந்நிலையில் தான் தற்போதும் அவர் மெஸ்ஸிக்கு சவால் விடுக்கும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி

சசிதரூர் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து மல்லிகார்ஜூன கார்கே களமிறங்கினார். சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருந்த நிலையில் அவர் வெற்றி பெற்றார். சசிதரூர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் கேரளா அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+