அரசியல்வாதியை கட்டிப்பிடித்த இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி.. பரவிய போட்டோ.. நடந்தது இதுதான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல்வாதியை கட்டிப்பிடித்துள்ள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் போட்டோ சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த புகைப்படம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் பெண் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா எஸ் ஐயர். அவரது கணவரும் பாசிட்டிவ்வாக பதில் அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்.சி மற்றும் எஸ்.டி நலத்துறை மற்றும் தேவஸம் போர்டு துறை அமைச்சராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு காலனி என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தடை செய்ததற்காக பல்வேறு தரப்பினர் அவரை பாராட்டி உள்ளனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்நிலையில் தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருபவர் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா எஸ் ஐயர். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். இவரது கணவர் சபரிநாதன் கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. திருவனந்தபுரம் சப் கலெக்டராக இருந்தபோது, அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சபரிநாதனை காதல் திருமணம் செய்து கொண்டார் திவ்யா.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராதகிருஷ்ணன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அன்று, ஐஏஎஸ் அதிகாரி திவ்யா, ராதாகிருஷ்ணனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் பல விதமாக கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி திவ்யா, "பத்தனம் திட்டா மாவட்டத்தில் நான் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது பழங்குடி இன கிராமங்களின் பிரச்சனைகளை ராதாகிருஷ்ணனிடம் எடுத்து கூறிய போது அவரின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. ஏழைகளின் துயரத்தைப் பார்க்கும்போது உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார். என்னைப் போன்றவர்களுக்கு அது தரும் எனர்ஜி கொஞ்சநஞ்சம் அல்ல" எனத் தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்ட அந்த புகைப்படம் தீயாகப் பரவிய நிலையில், நான் கடந்த 20ஆம் தேதி ராதாகிருஷ்ணனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற போது அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்ட போது எடுத்த படம் இது. அப்போது என் கணவர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யாவின் கணவர் சபரிநாதன் வெளியிட்டுள்ள பதிவில், "ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு, பத்தனம்திட்டாவில் உள்ள ஆட்சியர் இல்லத்துக்குச் சென்று எடுத்த புகைப்படம் வைரலானது. இந்தப் படம் தற்போதுள்ள ஆண்- பெண் சமன்பாட்டின் பின்னணியில் சாதகமாக விவாதிக்கப்படுவதைப் பற்றி மகிழ்ச்சியே" எனத் தெரிவித்துள்ளார். மேலும், புகைப்படத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை கண்டுகொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சில முறை திவ்யா எஸ் அய்யர், நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறார். தனது 3 வயது மகனை தனது கைகளில் வைத்துக்கொண்டு ஒரு நிகழ்வில் ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா உரையாற்றிய காணொளி வைரலாகப் பரவியதோடு, சமூக ஊடகங்களில் கலவையான விவாதத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், 8 வயதில் தனது சொந்த தந்தையால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகவும், வெளியே சொன்னால் சகோதரனை ஏதாவது செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் திவ்யா. இந்த விவகாரம் நாடு முழுவதும் அப்போது விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications