காரை பந்து போல் தூக்கி போட்டு ருத்ரதாண்டவம் ஆடிய யானை.. கேரள சம்பவத்தின் சாட்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே கிடங்கூர் பகுதியில் மகா விஷ்ணு கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவிற்காக கொல்லத்தில் இருந்து பார்த்தசாரதி என்ற யானை லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலில் யானை குளித்தது. அப்போது யானை திடீரென மிரண்டது. அப்போது காரை பந்து போல் தூக்கி போட்டு ருத்ரதாண்டவம் ஆடியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே கிடங்கூர் பகுதியில் மகா விஷ்ணு கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்காக கொல்லத்தில் இருந்து பார்த்தசாரதி என்ற யானை லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. மையநாடு பகுதியை சேர்ந்த 38 வயதாகும் விஷ்ணு என்பவர் லாரியை ஓட்டி வந்தார். பின்னர் கோவில் பகுதியில் லாரியில் இருந்து யானை கீழே இறக்கப்பட்டது.

Angamaly elephant that went on a rampage tossing a car around like a ball watch the video

நேற்று வரை உற்சாகமாக இருந்த பார்த்தசாரதி யானை, கோவில் குளத்தில் யானை குளித்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பார்த்தசாரதி யானை மிரண்டது. அங்கிருந்து சாலையில் யானை ஓடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினார்கள். உடனே பாகன்கள் அந்த யானையை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்களுடன் டிரைவர் விஷ்ணுவும் யானையை கட்டுப்படுத்த முயன்று உள்ளார். அந்த சமயத்தில் விஷ்ணுவை யானை தூக்கி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து ஆக்ரோஷம் அடைந்த யானை அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்களை தாக்கி சேதப்படுத்தியது. ஒரு காரை யானை துதிக்கையால் தூக்கி கவிழ்த்து போட்டது. தொடர்ந்து அந்த யானை, காரை பந்து போட்டு தூக்கிப்போட்டு ருத்ரதாண்டம் ஆடியது.யானை தன் உயரத்திற்கு காரை தூக்கி அப்படியே கீழே போட்டது. இதனிடையே தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் உடனே முடியவில்லை,

பின்னர் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தனர். வனத்துறையினரின் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் யானை மயக்கம் அடைந்து கீழே விழவே, அதன் காலில் இரும்பு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டது. யானை மிரண்டு ஓடும் போது தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை காரை தூக்கி போட்டு மிதித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இது ஒருபுறம் எனில், திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா அருகே கூடல் மாணிக்கம் பகுதியில் ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் எழுந்தருளிப்பு நிகழ்ச்சிக்காக காசிநாதன் என்ற யானை அழைத்து வரப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் யானை மிரண்டது. அதனை பாகன் அமல் கட்டுப்படுத்த முயன்றார்.

அவர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மற்றொரு பாகன் ஸ்ரீ குட்டன் (25) என்பவர் கட்டுப்படுத்த முயன்றார். அவரை யானை துதிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வனத்துறையினர் வந்து யானையை கட்டுப்படுத்தினர். கேரளத்தில் நேற்று ஒரே நாளில் கோவில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+